எதிர்ப்பு போராட்டங்களை நடாத்துவதுதான் ஜனநாயக பிரஜைகளின் கடமை என்பதை தற்போதைய ஆட்சியாளர்களிடம் பொலிஸார் கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அப்படியான எதிர்ப்பு போராட்டங்களை நடாத்தியவர்களே இன்று ஆட்சியாளர்களாகவும் வந்துள்ளார்கள் என்பதை இன்று நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாவட்ட செயலகத்தினை மறித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்குகள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்தன.
இன்றைய தினம் இது தொடர்பான வழக்கு மட்டக்களப் நீதிவான் நீதிமன்றில் நீதிபதி த.தர்சினியினால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் எதிராளிகளின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
இந்த நிலையில் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணங்களை முன்வைத்த நிலையில் இந்த வழக்கின் இறுதித்தினமாக ஜுன் 09ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றுக்கு முச்சக்கர வண்டியில் வருகைதந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி,
கச்சேரிக்கு செல்லுகின்ற வழி பாதையினை மதித்தார்கள் என்கின்ற குற்றச்சாட்டை முன்வைத்து எங்களுடைய கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது,
அந்த நேரத்தில் ஒரு சில மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நானும் சக சட்டசரணிகளும் ஆஜராகி இது எது எது அடிப்படைகளும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.
அந்த வேளையில் போலீசார் ஒன்றுக்கு தெரிவித்தனர் இது தொடர்பான புலனாய்வாளர்களின் அறிக்கைகள் தேவைப்படுகின்றது அவற்றை புலனாய்வு செய்வதற்கு தங்களுக்கு அவகாசம் தேவை என்று அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால் இப்பொழுது ஏறக்குறைய மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் கூட இன்னமும் எதுவிதமான குற்றச்சாட்டும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை. சென்ற வாரத்திலும் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போதும் ஜூன் மாதம் ஒன்பதாம் திகதிக்கு மிக மீண்டும் திகதி இடப்பட்டு இருக்கின்றது.
இது அரசாங்கத்துக்கு எதிராக ஒரு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சம்பவம் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பிரஜைகளின் கடமை என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை கூறியிருக்கின்றது. அவ்வாறு இருக்கின்ற போது எந்தவித அடிப்படையும் இல்லாமல் வெறுமனே இவர்களை அலக்கழிப்பதற்கு என்று இந்த வழக்கு இவ்வளவு காலமும் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது.
வெறுமனே விசாரிக்கின்றோம் என்று இழுத்தடிப்பதன் காரணத்தினால் தான் இன்றைக்கு இந்த வழக்கை ஒரு நகர்த்தல் பத்திரம் மூலமாக அழைத்து இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றோம். கௌரவ நீதவான் அம்மையார் அவர்கள் கடைசி ஒரு தவணை அவர்களுக்கு கொடுப்போம் ஏனென்றால் ஏற்கனவே ஜூன் 9 திகதி இடப்பட்டு இருக்கின்றதன் காரணத்தினால் அது இறுதி தினமாக கொடுப்போம் அன்று அவர்கள் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க விட்டால் வழக்கை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கடைசி தினமாக ஜூன் 9 கொடுக்கப்பட்டிருக்கிறது.
15 நாட்கள் தான் சட்டத்தில் இந்த விசாரணைகள் நடத்துவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது 15 நாட்களில் முடியாவிட்டால் இன்னும் ஒரு 15 நாட்கள் கொடுக்க முடியும் என ஒரு இருக்கின்றது அவ்வாறு 30 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டிய விடயத்தை மூன்று வருடங்களாக இழுத்தடிப்பது என்பது சட்டம் கண்டு கொள்ள முடியாத ஒரு விடயம் அதற்கு மேல் அதிகமாக அவர்கள் நீதிமன்றத்திற்கு சொல்லுகின்ற விடயம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது அது சம்பந்தமாக பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றது அதனையும் நான் மண்ணுக்கு கூறி இருக்கின்றேன்.
இன்றைய தினம் இறுதி தினமாக இல்லாததன் காரணத்தினால் அவ்வாறான சமர்ப்பணத்தை அடுத்த தவணையில் சமர்ப்பிப்பேன் அவ்வாறாக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தான் இன்று ஆட்சியாளர்களாகவும் வந்திருக்கிறார்கள் என்பதனை மன்றிலே கூறி இருக்கின்றேன்.
இன்றைக்கு ஆட்சியில் இருக்கின்றவர்களிடத்திலாவது கேட்டு அறிந்து கொள்ளுமாறு இவ்வாறு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவது தான் ஜனநாயக பிரஜைகள் உடைய கடமை அதனை செய்வது அதாவது யாராவது யாராவது அவ்வாறு செய்தால் அதற்கு உதவ வேண்டும் என்பதுதான் பல நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க இருக்கின்றது.
போலீசார் அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மாத்திரமல்ல அவர்கள் அவ்வாறான போராட்டங்கள் நடத்துவதற்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கின்றது.
ஆகையினால் வெறுமனே வேற்று கட்சி என்பதன் காரணத்தினாலே பழி தீர்க்கும் நோக்கோடு இவர்களை இழுத்தடிப்பதற்காக இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணத்தை எடுத்துக் கூறி இருக்கின்றேன் இறுதித்தனமாக ஜூன் 9 தவணை இடப்பட்டு இருக்கின்றது.
காணி அபகரிப்பு சம்பந்தமாக புதிதாக ஆட்சியில் வந்தவர்களுக்கு முதல் தடவை எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தபோது விபரமாக அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு கூறி இருக்கின்றார்கள். அதற்கு தாங்கள் இந்த விடயத்தை கையாளுவதாகும் சற்று காலம் தர வேண்டும் என்றும் கேட்டு இருக்கின்றார்கள்.
அந்த கால அவகாசம் இப்பொழுது முடிவடைந்து இருக்கின்றது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு ஆகையினால் அரசாங்கம் இது சம்பந்தமான விடயங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் பின்னணியில் நாங்கள் தொடர்ச்சியாக வகு விரைவில் மக்கள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம்.
அரசாங்கத்திற்கு தகவல் கொடுத்து அதாவது நீங்கள் கேட்டு காலம் முடிவடைந்து விட்டது பின்னவும் இது தீர்க்கப்படவில்லை புதிதாக வந்த அரசாங்கம் என்பதன் காரணத்தினாலே ஒரு கால அவகாசம் வழங்குவது தமக்கு நியாயமாகப்பட்டது ஆனால் அவர்கள் கொடுத்திருக்கின்ற வாக்குறுதிகள் எவற்றையும் அவர்கள் பூர்த்தி செய்ததாக தெரியவில்லை.
ஆகையினால் இந்த விடயங்கள் சம்பந்தமாக மிகவும் முக்கியமாக நில அபகரிப்பு விடையங்கள் சம்பந்தமாக நாங்கள் வகு விரைவில் மக்கள் போராட்டங்களை நடத்துவோம். என்றார்.
எதிர்ப்பு போராட்டங்களை நடாத்துவது ஜனநாயக பிரஜைகளின் கடமை - ஆட்சியாளர்களிடம் பொலிஸார் தெரிந்துகொள்ளவேண்டும் சுமந்திரன் எதிர்ப்பு போராட்டங்களை நடாத்துவதுதான் ஜனநாயக பிரஜைகளின் கடமை என்பதை தற்போதைய ஆட்சியாளர்களிடம் பொலிஸார் கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.அப்படியான எதிர்ப்பு போராட்டங்களை நடாத்தியவர்களே இன்று ஆட்சியாளர்களாகவும் வந்துள்ளார்கள் என்பதை இன்று நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாவட்ட செயலகத்தினை மறித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்குகள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்தன.இன்றைய தினம் இது தொடர்பான வழக்கு மட்டக்களப் நீதிவான் நீதிமன்றில் நீதிபதி த.தர்சினியினால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இன்றைய தினம் எதிராளிகளின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.இந்த நிலையில் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணங்களை முன்வைத்த நிலையில் இந்த வழக்கின் இறுதித்தினமாக ஜுன் 09ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றுக்கு முச்சக்கர வண்டியில் வருகைதந்தது குறிப்பிடத்தக்கதாகும்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி,கச்சேரிக்கு செல்லுகின்ற வழி பாதையினை மதித்தார்கள் என்கின்ற குற்றச்சாட்டை முன்வைத்து எங்களுடைய கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது,அந்த நேரத்தில் ஒரு சில மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நானும் சக சட்டசரணிகளும் ஆஜராகி இது எது எது அடிப்படைகளும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.அந்த வேளையில் போலீசார் ஒன்றுக்கு தெரிவித்தனர் இது தொடர்பான புலனாய்வாளர்களின் அறிக்கைகள் தேவைப்படுகின்றது அவற்றை புலனாய்வு செய்வதற்கு தங்களுக்கு அவகாசம் தேவை என்று அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால் இப்பொழுது ஏறக்குறைய மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் கூட இன்னமும் எதுவிதமான குற்றச்சாட்டும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை. சென்ற வாரத்திலும் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போதும் ஜூன் மாதம் ஒன்பதாம் திகதிக்கு மிக மீண்டும் திகதி இடப்பட்டு இருக்கின்றது. இது அரசாங்கத்துக்கு எதிராக ஒரு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சம்பவம் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பிரஜைகளின் கடமை என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை கூறியிருக்கின்றது. அவ்வாறு இருக்கின்ற போது எந்தவித அடிப்படையும் இல்லாமல் வெறுமனே இவர்களை அலக்கழிப்பதற்கு என்று இந்த வழக்கு இவ்வளவு காலமும் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது.வெறுமனே விசாரிக்கின்றோம் என்று இழுத்தடிப்பதன் காரணத்தினால் தான் இன்றைக்கு இந்த வழக்கை ஒரு நகர்த்தல் பத்திரம் மூலமாக அழைத்து இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றோம். கௌரவ நீதவான் அம்மையார் அவர்கள் கடைசி ஒரு தவணை அவர்களுக்கு கொடுப்போம் ஏனென்றால் ஏற்கனவே ஜூன் 9 திகதி இடப்பட்டு இருக்கின்றதன் காரணத்தினால் அது இறுதி தினமாக கொடுப்போம் அன்று அவர்கள் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க விட்டால் வழக்கை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கடைசி தினமாக ஜூன் 9 கொடுக்கப்பட்டிருக்கிறது.15 நாட்கள் தான் சட்டத்தில் இந்த விசாரணைகள் நடத்துவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது 15 நாட்களில் முடியாவிட்டால் இன்னும் ஒரு 15 நாட்கள் கொடுக்க முடியும் என ஒரு இருக்கின்றது அவ்வாறு 30 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டிய விடயத்தை மூன்று வருடங்களாக இழுத்தடிப்பது என்பது சட்டம் கண்டு கொள்ள முடியாத ஒரு விடயம் அதற்கு மேல் அதிகமாக அவர்கள் நீதிமன்றத்திற்கு சொல்லுகின்ற விடயம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது அது சம்பந்தமாக பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றது அதனையும் நான் மண்ணுக்கு கூறி இருக்கின்றேன்.இன்றைய தினம் இறுதி தினமாக இல்லாததன் காரணத்தினால் அவ்வாறான சமர்ப்பணத்தை அடுத்த தவணையில் சமர்ப்பிப்பேன் அவ்வாறாக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தான் இன்று ஆட்சியாளர்களாகவும் வந்திருக்கிறார்கள் என்பதனை மன்றிலே கூறி இருக்கின்றேன்.இன்றைக்கு ஆட்சியில் இருக்கின்றவர்களிடத்திலாவது கேட்டு அறிந்து கொள்ளுமாறு இவ்வாறு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவது தான் ஜனநாயக பிரஜைகள் உடைய கடமை அதனை செய்வது அதாவது யாராவது யாராவது அவ்வாறு செய்தால் அதற்கு உதவ வேண்டும் என்பதுதான் பல நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க இருக்கின்றது. போலீசார் அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மாத்திரமல்ல அவர்கள் அவ்வாறான போராட்டங்கள் நடத்துவதற்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கின்றது.ஆகையினால் வெறுமனே வேற்று கட்சி என்பதன் காரணத்தினாலே பழி தீர்க்கும் நோக்கோடு இவர்களை இழுத்தடிப்பதற்காக இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணத்தை எடுத்துக் கூறி இருக்கின்றேன் இறுதித்தனமாக ஜூன் 9 தவணை இடப்பட்டு இருக்கின்றது.காணி அபகரிப்பு சம்பந்தமாக புதிதாக ஆட்சியில் வந்தவர்களுக்கு முதல் தடவை எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தபோது விபரமாக அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு கூறி இருக்கின்றார்கள். அதற்கு தாங்கள் இந்த விடயத்தை கையாளுவதாகும் சற்று காலம் தர வேண்டும் என்றும் கேட்டு இருக்கின்றார்கள்.அந்த கால அவகாசம் இப்பொழுது முடிவடைந்து இருக்கின்றது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு ஆகையினால் அரசாங்கம் இது சம்பந்தமான விடயங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் பின்னணியில் நாங்கள் தொடர்ச்சியாக வகு விரைவில் மக்கள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம்.அரசாங்கத்திற்கு தகவல் கொடுத்து அதாவது நீங்கள் கேட்டு காலம் முடிவடைந்து விட்டது பின்னவும் இது தீர்க்கப்படவில்லை புதிதாக வந்த அரசாங்கம் என்பதன் காரணத்தினாலே ஒரு கால அவகாசம் வழங்குவது தமக்கு நியாயமாகப்பட்டது ஆனால் அவர்கள் கொடுத்திருக்கின்ற வாக்குறுதிகள் எவற்றையும் அவர்கள் பூர்த்தி செய்ததாக தெரியவில்லை.ஆகையினால் இந்த விடயங்கள் சம்பந்தமாக மிகவும் முக்கியமாக நில அபகரிப்பு விடையங்கள் சம்பந்தமாக நாங்கள் வகு விரைவில் மக்கள் போராட்டங்களை நடத்துவோம். என்றார்.