• Apr 21 2025

தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் வவுனியாவில் திறப்பு!

Chithra / Apr 20th 2025, 2:23 pm
image

 

 


இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதேச தேர்தல் காரியாலயம் வவுனியா மாகறம்பைக்குளம் பிரதான வீதியில் இன்று திறக்கப்பட்டது.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரச்சார பணிகள் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் வட்டாரத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக சி.சந்திரசேகரம் நேரடி வேட்பாளராக போட்டியிடுவதுடன் பா.ஆனன், ரா.நித்தியா ஆகியோர் பட்டியல் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

அவர்களது பிரதேசத்தேர்தல் அலுவலகம் மகாறம்பைக்குளம் பிரதான வீதியில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.


தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் வவுனியாவில் திறப்பு   இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதேச தேர்தல் காரியாலயம் வவுனியா மாகறம்பைக்குளம் பிரதான வீதியில் இன்று திறக்கப்பட்டது.எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரச்சார பணிகள் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில் வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் வட்டாரத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக சி.சந்திரசேகரம் நேரடி வேட்பாளராக போட்டியிடுவதுடன் பா.ஆனன், ரா.நித்தியா ஆகியோர் பட்டியல் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.அவர்களது பிரதேசத்தேர்தல் அலுவலகம் மகாறம்பைக்குளம் பிரதான வீதியில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement