• Mar 12 2025

யாழ்ப்பாணத்திலுள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தமிழரசுக் கட்சி இம்முறை நிர்வாகத்தை அமைக்கும்; எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை

Chithra / Mar 11th 2025, 3:38 pm
image


யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் இம்முறை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்தை அமைக்கும் என கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கு  தமிழரசுக்கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தவிசாளர் முதல்வர் யார் என்பதை தேர்தலின் பின் அறிவிப்போம் எனவும் பல புதியவர்கள் கட்டாயம் நியமிக்கப்படுவார்கள் எனவும்  தெரிவித்தார். 

அத்தோடு வேட்பாளர் தெரிவில் இழுபறி நிலவுவதாகவும் அவற்றை சுமுகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரவித்தார்.  

யாழ்ப்பாணத்திலுள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தமிழரசுக் கட்சி இம்முறை நிர்வாகத்தை அமைக்கும்; எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் இம்முறை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்தை அமைக்கும் என கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கு  தமிழரசுக்கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தவிசாளர் முதல்வர் யார் என்பதை தேர்தலின் பின் அறிவிப்போம் எனவும் பல புதியவர்கள் கட்டாயம் நியமிக்கப்படுவார்கள் எனவும்  தெரிவித்தார். அத்தோடு வேட்பாளர் தெரிவில் இழுபறி நிலவுவதாகவும் அவற்றை சுமுகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement