• Apr 27 2024

படகில் கனடா சென்ற யாழ் வாசி - சடலமாக உறவுகளிடம் ஒப்படைப்பு - கதறி அழும் பிள்ளைகள்

harsha / Dec 19th 2022, 11:07 am
image

Advertisement

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியிலிருந்து,கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கடந்த மாதம் 18 ஆம் திகதி  உயிர் மாய்ப்புக்கு  முயற்சித்தனர்.

இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.

உயிரிழந்த சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம்,நேற்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றையதினம் அவரின் இல்லத்தில் இறுதிக்கிரகைகள் இடம் பெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

படகில் கனடா சென்ற யாழ் வாசி - சடலமாக உறவுகளிடம் ஒப்படைப்பு - கதறி அழும் பிள்ளைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியிலிருந்து,கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கடந்த மாதம் 18 ஆம் திகதி  உயிர் மாய்ப்புக்கு  முயற்சித்தனர்.இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.உயிரிழந்த சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம்,நேற்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றையதினம் அவரின் இல்லத்தில் இறுதிக்கிரகைகள் இடம் பெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement