யாழ்ப்பாண தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(23) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை 24 மற்றும் நாளை மறுதினம் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சியினை மக்கள் முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணைதூதரக அதிகாரி ராஜேஷ் , வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரணவன், நிகழ்வின் ஊடக இணைப்பாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் ஆகியோர் அதிதியாக கலந்து கொண்டார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
'யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024' வர்த்தக கண்காட்சி ஆரம்பம். யாழ்ப்பாண தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(23) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை 24 மற்றும் நாளை மறுதினம் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியினை மக்கள் முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.இன்றைய நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணைதூதரக அதிகாரி ராஜேஷ் , வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரணவன், நிகழ்வின் ஊடக இணைப்பாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் ஆகியோர் அதிதியாக கலந்து கொண்டார்கள்.இரண்டாம் நாள் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.