• May 03 2024

யாழ் மருதங்கேணி சம்பவம்..! கஜேந்திரகுமாருக்கு எதிராக நடவடிக்கை...! 'சிங்கள ராவய' கோரிக்கை..!samugammedia

Sharmi / Jun 6th 2023, 9:53 am
image

Advertisement

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எதிராக பாராளுமன்ற சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தியதாகவும், அநாகரீகமான நடத்தையை வெளிப்படுத்தியதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்கள ராவய இன்று பாராளுமன்றத்தை அணுகவுள்ளது.

இது தொடர்பான கடிதத்தினையும் சிங்கள ராவய சபாநாயகரிடம் கையளிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்பான சர்ச்சை கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், மருதங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இருந்து உருவாகியுள்ளது.

இச் சம்பவத்திற்கு பதிலளிக்கும் வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ் அதிகாரிகளின் அச்சுறுத்தல்களை முன்னிலைப்படுத்தி முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த வாரத்தில் சிறப்புரிமை மீறல் விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பவும் அவர் திட்டமிட்டுள்ளதுடன் நேற்றையதினம்குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் அங்கத்தவரான பெண் அரசியல் செயற்பாட்டாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மருதங்கேணி சம்பவம். கஜேந்திரகுமாருக்கு எதிராக நடவடிக்கை. 'சிங்கள ராவய' கோரிக்கை.samugammedia தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எதிராக பாராளுமன்ற சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தியதாகவும், அநாகரீகமான நடத்தையை வெளிப்படுத்தியதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்கள ராவய இன்று பாராளுமன்றத்தை அணுகவுள்ளது.இது தொடர்பான கடிதத்தினையும் சிங்கள ராவய சபாநாயகரிடம் கையளிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்பான சர்ச்சை கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், மருதங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இருந்து உருவாகியுள்ளது.இச் சம்பவத்திற்கு பதிலளிக்கும் வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ் அதிகாரிகளின் அச்சுறுத்தல்களை முன்னிலைப்படுத்தி முறைப்பாடு செய்துள்ளார்.இந்த வாரத்தில் சிறப்புரிமை மீறல் விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பவும் அவர் திட்டமிட்டுள்ளதுடன் நேற்றையதினம்குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் அங்கத்தவரான பெண் அரசியல் செயற்பாட்டாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement