• Apr 26 2024

இணக்கமின்றி முடிவுக்குவந்த தமிழரசுக் கட்சியின் யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளர் தெரிவு கூட்டம்

Chithra / Jan 17th 2023, 7:33 pm
image

Advertisement

யாழ் மாநகர சபையில் ஜனவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்தநிலையில் – நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக தீர்மானம் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு ஜனவரி 19 ஆம் திகதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவியதால் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில இன்று(17) மாலை கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழரசு கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

சொலமன் சிறில், இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெருவுக்கு முன்வைக்கப்பட்டதால் கூட்டம் இணக்கமின்றி முடிந்தது.

இணக்கமின்றி முடிவுக்குவந்த தமிழரசுக் கட்சியின் யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளர் தெரிவு கூட்டம் யாழ் மாநகர சபையில் ஜனவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்தநிலையில் – நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக தீர்மானம் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு ஜனவரி 19 ஆம் திகதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.இந்நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவியதால் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில இன்று(17) மாலை கலந்துரையாடல் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழரசு கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.சொலமன் சிறில், இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெருவுக்கு முன்வைக்கப்பட்டதால் கூட்டம் இணக்கமின்றி முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement