• May 07 2024

நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி..! சஜித் விடுத்த அவசர கோரிக்கை

Chithra / Apr 26th 2024, 1:33 pm
image

Advertisement

 

நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 இன்று சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசு ஏப்ரல் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தேர்வு நடைமுறையில் கடுமையான சிக்கல்கள் உள்ளன.

சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுகிறேன். விநியோகிக்கப்படும் அரிசியின் தரத்தை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டவை  என கோரிக்கை விடுத்துள்ளார்.  

நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி. சஜித் விடுத்த அவசர கோரிக்கை  நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அரசு ஏப்ரல் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தேர்வு நடைமுறையில் கடுமையான சிக்கல்கள் உள்ளன.சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுகிறேன். விநியோகிக்கப்படும் அரிசியின் தரத்தை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டவை  என கோரிக்கை விடுத்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement