• Nov 05 2024

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட யாழ். வயாவிளான் வீதி

Chithra / Nov 1st 2024, 8:55 am
image

Advertisement

 

யாழ் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி முதல் திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணம் பலாலி வீதியில், வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட யாழ். வயாவிளான் வீதி  யாழ் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி முதல் திறக்கப்பட்டுள்ளது.அதன்படி யாழ்ப்பாணம் பலாலி வீதியில், வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement