• Oct 18 2024

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த யாழ்ப்பாண பாடசாலை..! samugammedia

Chithra / May 4th 2023, 7:57 am
image

Advertisement

யாழ்ப்பாணம் - சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாலயம் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மதர் ஸ்ரீலங்கா நிறுவனம் கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மதர் ஸ்ரீலங்கா கழகங்களுக்கிடையே சமூக பொறுப்பு, ஐக்கியம், திறன்விருத்தி ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்திய போட்டியிலேயே குறித்த பாடசாலை முதலிடம் பிடித்து தேசிய மட்டத்தில் சாதித்து காட்டியுள்ளது.


வெற்றிபெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போது பிரதமர் தினேஷ் குணவர்த்தன,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, 3 மில்லியன் ரூபா செலவில் கணனி ஆய்வுகூடமும் அமைத்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இப் போட்டியில் குறித்த பாடசாலை மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையின் நடன ஆற்றுகையும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. மேலும் சிறப்பாகச் செயற்பட்ட கழகத்துக்கான விருது தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த யாழ்ப்பாண பாடசாலை. samugammedia யாழ்ப்பாணம் - சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாலயம் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.மதர் ஸ்ரீலங்கா நிறுவனம் கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மதர் ஸ்ரீலங்கா கழகங்களுக்கிடையே சமூக பொறுப்பு, ஐக்கியம், திறன்விருத்தி ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்திய போட்டியிலேயே குறித்த பாடசாலை முதலிடம் பிடித்து தேசிய மட்டத்தில் சாதித்து காட்டியுள்ளது.வெற்றிபெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போது பிரதமர் தினேஷ் குணவர்த்தன,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, 3 மில்லியன் ரூபா செலவில் கணனி ஆய்வுகூடமும் அமைத்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.இப் போட்டியில் குறித்த பாடசாலை மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.இப்பாடசாலையின் நடன ஆற்றுகையும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. மேலும் சிறப்பாகச் செயற்பட்ட கழகத்துக்கான விருது தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement