• May 03 2024

தேசிய பொங்கல் விழாவை கொண்டாட யாழ். வரும் ரணில் - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Chithra / Jan 14th 2023, 8:28 pm
image

Advertisement

தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தினை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை யாழிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதையடுத்து, தற்போது நல்லூர் பகுதியில்  பொலிஸார், இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை காலை யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்து இறங்கவுள்ளார்.


அதன்பின், காலை 09.00 மணியவில் நாகவிகாரைக்குச் சென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அங்கு சந்திக்கவுள்ளார்.

அதைதொடர்ந்து ஆயர் இல்லம், ஆதனம் போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

பின்னர்,  மதியம் 12 மணியளவில் நல்லூர் பகுதயில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, துர்க்கா தேவி மண்டபத்தில் 3.00 மணியளவில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதைதொடர்ந்து கச்சேரியில் காணி விடுவிப்புத் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

தேசிய பொங்கல் விழாவை கொண்டாட யாழ். வரும் ரணில் - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தினை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை யாழிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இதையடுத்து, தற்போது நல்லூர் பகுதியில்  பொலிஸார், இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதாக தெரியவருகின்றது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை காலை யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்து இறங்கவுள்ளார்.அதன்பின், காலை 09.00 மணியவில் நாகவிகாரைக்குச் சென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அங்கு சந்திக்கவுள்ளார்.அதைதொடர்ந்து ஆயர் இல்லம், ஆதனம் போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.பின்னர்,  மதியம் 12 மணியளவில் நல்லூர் பகுதயில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, துர்க்கா தேவி மண்டபத்தில் 3.00 மணியளவில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.அதைதொடர்ந்து கச்சேரியில் காணி விடுவிப்புத் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement