• Nov 28 2024

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி...!

Chithra / Dec 11th 2023, 7:33 am
image


கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் நேற்று(10) பிற்பகல்  கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 217 இல் தோஹா செல்வதற்காக அனுமதி பெற வந்தபோது, ​​அந்த இளைஞனின் கடவுச்சீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, சோதனையின் போது, அவரது இலங்கை கடவுச்சீட்டு மற்றும் மாலைதீவுக்கான போலியான விமான பயணச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர் விசாரணைகளின் போது, விமான நிலையத்திற்கு அருகாமையில் போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் ஒருவருக்கு 40 லட்சம் ரூபா செலுத்தி அவர் போலி கனேடிய போலி கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பருத்திதுறையை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி. கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞரை இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் நேற்று(10) பிற்பகல்  கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 217 இல் தோஹா செல்வதற்காக அனுமதி பெற வந்தபோது, ​​அந்த இளைஞனின் கடவுச்சீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.அதனை தொடர்ந்து, சோதனையின் போது, அவரது இலங்கை கடவுச்சீட்டு மற்றும் மாலைதீவுக்கான போலியான விமான பயணச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.பின்னர் விசாரணைகளின் போது, விமான நிலையத்திற்கு அருகாமையில் போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் ஒருவருக்கு 40 லட்சம் ரூபா செலுத்தி அவர் போலி கனேடிய போலி கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட இளைஞன் பருத்திதுறையை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில், விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement