• May 20 2024

இலங்கையிலும் ஜல்லிக்கட்டு போட்டி..! கிழக்கு ஆளுநர் நடவடிக்கை..!samugammedia

Sharmi / Jul 6th 2023, 11:27 am
image

Advertisement

இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில தலைவராகவுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருச்சிக்கு சென்றவேளை அவருக்கு அச்சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சங்கத்தின் தலைவா் ஒண்டிராஜ், மாநில செயலா் சூரியூா் ராஜா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனா்.

இதன்போது கருத்து தெரிவித்த  செந்தில் தொண்டமான்,

இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும், இலங்கை அரசிடம் பேசி, மீட்டுக் கொடுக்கும் பணியை கடந்த 25 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம்.

எங்களது பணி தொடரும். தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வரலாற்றுடன் தொடா்புடையது வீர விளையாட்டான ஐல்லிக்கட்டு. இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.


இலங்கையிலும் ஜல்லிக்கட்டு போட்டி. கிழக்கு ஆளுநர் நடவடிக்கை.samugammedia இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில தலைவராகவுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருச்சிக்கு சென்றவேளை அவருக்கு அச்சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சங்கத்தின் தலைவா் ஒண்டிராஜ், மாநில செயலா் சூரியூா் ராஜா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனா்.இதன்போது கருத்து தெரிவித்த  செந்தில் தொண்டமான், இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும், இலங்கை அரசிடம் பேசி, மீட்டுக் கொடுக்கும் பணியை கடந்த 25 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம்.எங்களது பணி தொடரும். தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வரலாற்றுடன் தொடா்புடையது வீர விளையாட்டான ஐல்லிக்கட்டு. இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement