• Jun 02 2024

திருமலையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு! கண்டுகழிக்க குவிந்த பொதுமக்கள்

Chithra / Jan 16th 2023, 10:05 pm
image

Advertisement

திருகோணமலை - சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரையில்,  காளை அடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இடம்பெற்றது.

சம்பூர் இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த நான்கு வருடங்களாக சம்பூர் பகுதியில் காளை அடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் இடம்பெற்ற காளை அடக்கும் போட்டியில் 10க்கும் மேற்பட்ட காளைகளும் 30க்கும் அதிகமான போட்டியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது காளை அடக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்கள், போட்டியில் பங்குபற்றியோர் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு ஜல்லிக் கட்டு இடம்பெற்ற இடத்தில் பொங்கல் செய்யப்பட்டிருந்தது.

இப்போட்டியை கண்டுகழிக்க அதிகளவான பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


திருமலையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு கண்டுகழிக்க குவிந்த பொதுமக்கள் திருகோணமலை - சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரையில்,  காளை அடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இடம்பெற்றது.சம்பூர் இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த நான்கு வருடங்களாக சம்பூர் பகுதியில் காளை அடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இன்றையதினம் இடம்பெற்ற காளை அடக்கும் போட்டியில் 10க்கும் மேற்பட்ட காளைகளும் 30க்கும் அதிகமான போட்டியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.இதன்போது காளை அடக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்கள், போட்டியில் பங்குபற்றியோர் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அத்தோடு ஜல்லிக் கட்டு இடம்பெற்ற இடத்தில் பொங்கல் செய்யப்பட்டிருந்தது.இப்போட்டியை கண்டுகழிக்க அதிகளவான பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement