ஜம்மு - காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையால் சுமார் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
120க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பிரபலமான புனித யாத்திரைப் பாதையில் ஒரு நிறுத்தப் புள்ளியான கிஷ்த்வார் மாவட்டத்தின் சசோதி நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் என்பன தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன.
வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
அதிகமானோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இமயமலை மாநிலமான உத்தரகாண்டில் ஒரு கிராமம் முழுவதையும் பலத்த வெள்ளம் மற்றும் மண்சரிவு சூழ்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு இது நடந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரை புரட்டிப்போட்ட கனமழை; 46 பேர் பலி 200க்கும் மேற்பட்டோர் மாயம் ஜம்மு - காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையால் சுமார் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.120க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.பிரபலமான புனித யாத்திரைப் பாதையில் ஒரு நிறுத்தப் புள்ளியான கிஷ்த்வார் மாவட்டத்தின் சசோதி நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் என்பன தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன.வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.அதிகமானோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.இமயமலை மாநிலமான உத்தரகாண்டில் ஒரு கிராமம் முழுவதையும் பலத்த வெள்ளம் மற்றும் மண்சரிவு சூழ்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு இது நடந்துள்ளது.