• Nov 22 2024

தென்னிந்திய நடிகைகள் குறித்த விமர்சனங்களுக்கு ஜீவன் பதில்

Chithra / Jan 24th 2024, 3:51 pm
image

 

அண்மையில் ஹட்டனில் நடைபெற்ற, தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டது எனவும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வில் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இதேவேளை வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தனர்.

ஏனைய தேசிய நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவு பணமே செலவிடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செலவு மிகுந்த ஆடம்பர களியாட்டமாக இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை எனவும் செழுமையான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விருது வென்ற தென்னிந்திய நடிகைகள் அழைத்து வரப்பட்ட விடயத்தை சிலர் அற்பமான விடயமாக விமர்சனம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அது அற்பமான விடயமல்ல எனவும் சமூகத்தை வலுவூட்டும் நோக்கில் அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  

தென்னிந்திய நடிகைகள் குறித்த விமர்சனங்களுக்கு ஜீவன் பதில்  அண்மையில் ஹட்டனில் நடைபெற்ற, தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டது எனவும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வில் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தனர்.ஏனைய தேசிய நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவு பணமே செலவிடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.செலவு மிகுந்த ஆடம்பர களியாட்டமாக இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை எனவும் செழுமையான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.விருது வென்ற தென்னிந்திய நடிகைகள் அழைத்து வரப்பட்ட விடயத்தை சிலர் அற்பமான விடயமாக விமர்சனம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.எனினும் அது அற்பமான விடயமல்ல எனவும் சமூகத்தை வலுவூட்டும் நோக்கில் அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement