• Nov 22 2024

மரக்கறிகளின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு..!

Chithra / Jan 24th 2024, 3:48 pm
image

 

கடந்த மூன்று நாட்களுக்கு முன் சந்தையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் விலை மீண்டும் திடீரென உயர்வடைந்துள்ளது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை வெளியிடப்பட்ட விலை பட்டியலிலேயே குறித்த விலை நிலவரம் வெளியாகி உள்ளது.

 கரட் ஒரு கிலோகிராம் விவசாயிகளிடம் 1200/= ரூபாய் முதல் 1250/= ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்பட்டு அதை 1300/= விற்பனை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கோவா 470/= ரூபாய், லீக்ஸ் 480/=ரூபாய், ராபு 170/= ரூபாய், உருளைகிழங்கு 320/= என மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரக்கறிகளின் விலை அதிகமாக உள்ளதால், அன்றாட தேவைக்காக குறைந்த அளவே மரக்கறிகளை வாங்குவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மரக்கறிகளின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு.  கடந்த மூன்று நாட்களுக்கு முன் சந்தையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் விலை மீண்டும் திடீரென உயர்வடைந்துள்ளது.நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை வெளியிடப்பட்ட விலை பட்டியலிலேயே குறித்த விலை நிலவரம் வெளியாகி உள்ளது. கரட் ஒரு கிலோகிராம் விவசாயிகளிடம் 1200/= ரூபாய் முதல் 1250/= ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்பட்டு அதை 1300/= விற்பனை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.இதற்கமைய கோவா 470/= ரூபாய், லீக்ஸ் 480/=ரூபாய், ராபு 170/= ரூபாய், உருளைகிழங்கு 320/= என மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மரக்கறிகளின் விலை அதிகமாக உள்ளதால், அன்றாட தேவைக்காக குறைந்த அளவே மரக்கறிகளை வாங்குவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement