• May 03 2024

தமிழக எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ஜீவன் தொண்டமான்...!samugammedia

Sharmi / Jan 17th 2024, 4:05 pm
image

Advertisement

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று(17) சந்திப்பு நடைபெற்றது.

சென்னையில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் " செல்வந்தி" இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் கே. ராஜுவும் பங்கேற்றிருந்தார்.

மரியாதை நிமித்தம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவருக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக அ.தி.மு.க. தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதற்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் நடத்தப்பட்ட நாம் - 200 நிகழ்ச்சி குறித்தும், எதிர்வரும் 21 ஆம் திகதி மலையகத்தில் நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழா தொடர்பிலும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை, இலங்கைக்கு குறிப்பாக மலையக பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.




தமிழக எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ஜீவன் தொண்டமான்.samugammedia அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று(17) சந்திப்பு நடைபெற்றது.சென்னையில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் " செல்வந்தி" இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் கே. ராஜுவும் பங்கேற்றிருந்தார்.மரியாதை நிமித்தம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவருக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக அ.தி.மு.க. தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதற்கு நன்றிகளையும் தெரிவித்தார்.அத்துடன், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் நடத்தப்பட்ட நாம் - 200 நிகழ்ச்சி குறித்தும், எதிர்வரும் 21 ஆம் திகதி மலையகத்தில் நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழா தொடர்பிலும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.அதேவேளை, இலங்கைக்கு குறிப்பாக மலையக பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement