• May 30 2025

தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற் சந்தை..!

Sharmi / May 28th 2025, 4:12 pm
image

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மாபெரும் தொழிற் சந்தை ஒன்று இன்று (28) இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதலுக்கு இணங்க இடம்பெற்ற குறித்த தொழிற் சந்தையை தம்பலகாமம் பிரதேச செயலகமும் மனித வலு அபிவிருத்தி வேலை வாய்ப்பு திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். 

தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளவும் தொழில் வாண்மையான பாடநெறிகளை தொடர்வதற்குமான வாய்ப்புக்கள் இங்கு இடம்பெற்றன. 

இதில் அரச சார்பற்ற தனியார் நிறுவனங்கள் அரச துறை சார் இரானுவ ஆட்சேர்ப்பு போன்ற பல துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. 

இதில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், நிர்வாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர ,மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்கள மாவட்ட இணைப்பாளர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற் சந்தை. திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மாபெரும் தொழிற் சந்தை ஒன்று இன்று (28) இடம்பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதலுக்கு இணங்க இடம்பெற்ற குறித்த தொழிற் சந்தையை தம்பலகாமம் பிரதேச செயலகமும் மனித வலு அபிவிருத்தி வேலை வாய்ப்பு திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளவும் தொழில் வாண்மையான பாடநெறிகளை தொடர்வதற்குமான வாய்ப்புக்கள் இங்கு இடம்பெற்றன. இதில் அரச சார்பற்ற தனியார் நிறுவனங்கள் அரச துறை சார் இரானுவ ஆட்சேர்ப்பு போன்ற பல துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. இதில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், நிர்வாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர ,மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்கள மாவட்ட இணைப்பாளர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement