• Sep 20 2024

மனைவியுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய ஜோ பைடன்!

Tamil nila / Dec 25th 2022, 9:03 pm
image

Advertisement

உலகம் முழுவதும் இன்றைய தினம் (25-12-2022) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


குறிப்பாக அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு பனிப்புயல் காரணமாக அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு எளிமையான முறையில் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,


தனது மனைவியுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


"சில இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே பாக்கி! இந்த கிறிஸ்துமஸ் தினம் உங்களுக்கு மிக சிறப்பானதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.


முன்னதாக தனது கிறிஸ்துமஸ் உரையின்போது பேசிய ஜோ பைடன் கட்சி, கொள்கை உள்ளிட்ட பாகுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய ஜோ பைடன் உலகம் முழுவதும் இன்றைய தினம் (25-12-2022) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.குறிப்பாக அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு பனிப்புயல் காரணமாக அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு எளிமையான முறையில் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,தனது மனைவியுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்."சில இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே பாக்கி இந்த கிறிஸ்துமஸ் தினம் உங்களுக்கு மிக சிறப்பானதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.முன்னதாக தனது கிறிஸ்துமஸ் உரையின்போது பேசிய ஜோ பைடன் கட்சி, கொள்கை உள்ளிட்ட பாகுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement