• May 03 2024

இஸ்ரேலில் ஜோ பைடன்..! கட்டுப்படுத்தப்படுமா போர்? samugammedia

Chithra / Oct 18th 2023, 4:55 pm
image

Advertisement



இஸ்ரேல் – காஸா போர் சூழலில் இஸ்ரேலுக்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்பதாக தெரிவிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்.

பைடனை வரவேற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவின் பென் குரியன் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை அரவணைத்து வரவேற்றமை சர்வதேச மத்தியில் பெரும் பேசுபொருளாக உள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் அறிவித்து, காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எந்தவித தொய்வும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஏவுகணை தாக்குதல் மட்டுமே நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

காசாவை ஆக்கிரமிக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் இருப்பதால், இது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.

அரபு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக ஜோர்டானில் இன்று அரபு நாட்டு தலைவர்களுடன் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார்.

இஸ்ரேல் சென்று, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பின், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 500 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அரபு நாட்டு தலைவர்கள் ஜோ பைடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்ற செய்தி வெளியானது. எங்களால் போரை முடிவுக்கு கொண்டுவர இயலாது என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக ஜோர்டான் தெரிவித்தது.

ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என பைடன் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இஸ்ரேல் வந்துள்ளார்.

என்றபோதிலும், இஸ்ரேலிடம் காசா மீதான கண்மூடித்தனமான தாக்குதலை குறைக்க வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசாவில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியை ஊக்குவிக்கவும் பைடன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இஸ்ரேலில் ஜோ பைடன். கட்டுப்படுத்தப்படுமா போர் samugammedia இஸ்ரேல் – காஸா போர் சூழலில் இஸ்ரேலுக்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்பதாக தெரிவிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்.பைடனை வரவேற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவின் பென் குரியன் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை அரவணைத்து வரவேற்றமை சர்வதேச மத்தியில் பெரும் பேசுபொருளாக உள்ளது.இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் அறிவித்து, காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எந்தவித தொய்வும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஏவுகணை தாக்குதல் மட்டுமே நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.காசாவை ஆக்கிரமிக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் இருப்பதால், இது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.அரபு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக ஜோர்டானில் இன்று அரபு நாட்டு தலைவர்களுடன் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார்.இஸ்ரேல் சென்று, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பின், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில்தான் காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 500 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதனால், அரபு நாட்டு தலைவர்கள் ஜோ பைடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்ற செய்தி வெளியானது. எங்களால் போரை முடிவுக்கு கொண்டுவர இயலாது என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக ஜோர்டான் தெரிவித்தது.ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என பைடன் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இஸ்ரேல் வந்துள்ளார்.என்றபோதிலும், இஸ்ரேலிடம் காசா மீதான கண்மூடித்தனமான தாக்குதலை குறைக்க வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.காசாவில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியை ஊக்குவிக்கவும் பைடன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement