• Sep 12 2025

ஊடகவியலாளர் நிமலராஜன் தொடர்பான விசாரணை அறிக்கை; மன்னாரில் வழங்கி வைப்பு!

shanuja / Sep 11th 2025, 7:01 pm
image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை (11) மன்னார் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஊடகவியலாளர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 40 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்கள் போராட்டத்தில் வைத்து முதல் கட்டமாக குறித்த அறிக்கை  வழங்கப்பட்டது.


மேலும் பொதுமக்கள், வர்த்தகர்கள், திணைக்களத் தலைவர்கள்,உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலருக்கும் குறித்த அறிக்கை வழங்கப்பட்டது.


குறித்த அறிக்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் நிமலராஜன் தொடர்பான விசாரணை அறிக்கை; மன்னாரில் வழங்கி வைப்பு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை (11) மன்னார் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஊடகவியலாளர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 40 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்கள் போராட்டத்தில் வைத்து முதல் கட்டமாக குறித்த அறிக்கை  வழங்கப்பட்டது.மேலும் பொதுமக்கள், வர்த்தகர்கள், திணைக்களத் தலைவர்கள்,உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலருக்கும் குறித்த அறிக்கை வழங்கப்பட்டது.குறித்த அறிக்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement