• Aug 01 2026

யாழில் போராட்டத்தில் குதித்த ஊடகவியலாளர்கள் - பிரதியமைச்சரின் நிகழ்வும் புறக்கணிப்பு

Chithra / Jul 31st 2026, 11:51 am
image


யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, 


யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.


முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்த நிலையிலையே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இந்நிலையில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி, ஊடக பிரதி அமைச்சரின் நிகழ்வினை யாழ். ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்தனர்.

யாழில் போராட்டத்தில் குதித்த ஊடகவியலாளர்கள் - பிரதியமைச்சரின் நிகழ்வும் புறக்கணிப்பு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்த நிலையிலையே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி, ஊடக பிரதி அமைச்சரின் நிகழ்வினை யாழ். ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement