இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பிரதீப் ஜயவர்தனவை ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும், மத்திய குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் பிரவேசித்த இவர், 2017 இல் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவானார்.
இன்று வியாழக்கிழமை (03) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக சந்திப்பிலும் கலந்து கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்த ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரன். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பிரதீப் ஜயவர்தனவை ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும், மத்திய குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் பிரவேசித்த இவர், 2017 இல் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவானார்.இன்று வியாழக்கிழமை (03) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக சந்திப்பிலும் கலந்து கொண்டார்.