யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சார்ந்த வைத்தியர்கள் இன்று(04) காலை முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்திய அத்தியட்சகரை இடமாற்றக் கோரியே இந்தப் போராட்டம் இடம்பெறுகிறது.
இதன் காரணமாக அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய மருத்துவ சேவைகளில் வைத்தியர்கள் ஈடுபடவில்லை. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதை காணக் கூடியதாக இருந்தது
இதேவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை மேம்படுத்த உழைக்கும் என்னை வைத்தியசாலைப் பொறுப்பு அதிகாரி பதவியில் இருந்து அகற்ற சில வைத்தியர்கள் முனைவதாகவும்,
அதற்கு வைத்திய அதிகாரிகள் சங்கம் துணை போவதாகவும் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டுகிறார்.
இது விடயம் தொடர்பாக அவர் நேற்றைய தினம் (03) காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
போராட்டத்தில் குதித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சார்ந்த வைத்தியர்கள் இன்று(04) காலை முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்திய அத்தியட்சகரை இடமாற்றக் கோரியே இந்தப் போராட்டம் இடம்பெறுகிறது.இதன் காரணமாக அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய மருத்துவ சேவைகளில் வைத்தியர்கள் ஈடுபடவில்லை. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதை காணக் கூடியதாக இருந்ததுஇதேவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை மேம்படுத்த உழைக்கும் என்னை வைத்தியசாலைப் பொறுப்பு அதிகாரி பதவியில் இருந்து அகற்ற சில வைத்தியர்கள் முனைவதாகவும், அதற்கு வைத்திய அதிகாரிகள் சங்கம் துணை போவதாகவும் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டுகிறார்.இது விடயம் தொடர்பாக அவர் நேற்றைய தினம் (03) காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.