• May 14 2024

கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும்...!ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Sep 18th 2023, 1:52 pm
image

Advertisement

ரணிலுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என்றும் இதன் காரணமாக ரணில் ராஜபக்ச அரசு சூழ்ச்சி ஒன்றை செய்து இனவாதத்தை மதவாதத்தை இந்த நாட்டில் உருவாக்கி அதன் மூலமாக தங்களுடைய இருப்பை பாதுகாப்பதாக சந்தேகம் எமக்கு எழுகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபன் இறந்து போனது, ஐசா முனையில் நடந்த போராட்டத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும் படி அகிம்சா முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர். அவருடைய நினைவு தினத்தில் தான் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரனை பொலிஸார் முன்னிலையில் தாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் நிலைமாறும் நீதி சமாதானம் சமத்துவம் என்பன தற்போதைய அரசாங்கத்தில் கிடையாது என்றும் இறந்தவர்களுக்கு நினைவு கூற உரிமை இருக்கு என்று கூறுகின்ற அரசு இறந்தவர்களை நினைவு கூறுகின்ற வேளையில் அவர்களை அடிக்க காவல்துறைக்கு பாதுகாப்பு வழங்கி வைத்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் சனல் 4 காணொளி மூலம் வெளியான தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்காக செய்யப்பட்ட முயற்சி என்ற சந்தேகங்கள் இருக்கின்றது ராஜபக்ச அரசு தங்களுடைய இருப்பிற்காக இனவாதத்தை கொண்டுவருவதை நாம் பார்க்கின்றோம்.

எனவே, தற்போது நடைபெற்ற நிகழ்வில் அரசு பின்புலமாக செயற்படவில்லை என்று காட்டுவதாக இருந்தால் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் அரசு இதற்கு சாதகமாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்

மேலும், பாராளுமன்ற உறுப்பினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் உலகத்திற்கு நாங்கள் நிலைமாறும் நீதி, சமாதானம், சமத்துவம் தமிழ் மக்களின் உரிமைகள் அவற்றை நாம் வழங்குகின்றோம் என சர்வதேச ரீதியாக பேசிவருகின்றார்கள் தற்போதுள்ள அரசிற்கு மக்கள் ஆணை கிடையாது ஜனநாயக ரீதியாக தேர்தலுக்கு வர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

மேலும்,  இந்த அரசானது இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.  அது மட்டுமன்றி வடக்கில் பன்சலைகளை நிர்மாணிக்கும் பொழுது காணிகள் நிர்மாணிக்கும் பொழுது நடைபெற்ற பிரச்சனைகளை நாங்கள் அவதானித்துள்ளோம்.  இது போன்ற செயற்பாட்டால் நாடு மிகவும் பின்னோக்கி தள்ளப்படும் இதற்கு உடனடி தீர்வு வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்

மேலும் மக்களை அடக்குவதற்கான சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளனர் இதனை உடனடியாக இந்த அரசு நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும்.ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள்.samugammedia ரணிலுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என்றும் இதன் காரணமாக ரணில் ராஜபக்ச அரசு சூழ்ச்சி ஒன்றை செய்து இனவாதத்தை மதவாதத்தை இந்த நாட்டில் உருவாக்கி அதன் மூலமாக தங்களுடைய இருப்பை பாதுகாப்பதாக சந்தேகம் எமக்கு எழுகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், திலீபன் இறந்து போனது, ஐசா முனையில் நடந்த போராட்டத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும் படி அகிம்சா முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர். அவருடைய நினைவு தினத்தில் தான் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரனை பொலிஸார் முன்னிலையில் தாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் நிலைமாறும் நீதி சமாதானம் சமத்துவம் என்பன தற்போதைய அரசாங்கத்தில் கிடையாது என்றும் இறந்தவர்களுக்கு நினைவு கூற உரிமை இருக்கு என்று கூறுகின்ற அரசு இறந்தவர்களை நினைவு கூறுகின்ற வேளையில் அவர்களை அடிக்க காவல்துறைக்கு பாதுகாப்பு வழங்கி வைத்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் சனல் 4 காணொளி மூலம் வெளியான தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்காக செய்யப்பட்ட முயற்சி என்ற சந்தேகங்கள் இருக்கின்றது ராஜபக்ச அரசு தங்களுடைய இருப்பிற்காக இனவாதத்தை கொண்டுவருவதை நாம் பார்க்கின்றோம்.எனவே, தற்போது நடைபெற்ற நிகழ்வில் அரசு பின்புலமாக செயற்படவில்லை என்று காட்டுவதாக இருந்தால் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் அரசு இதற்கு சாதகமாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார் மேலும், பாராளுமன்ற உறுப்பினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் உலகத்திற்கு நாங்கள் நிலைமாறும் நீதி, சமாதானம், சமத்துவம் தமிழ் மக்களின் உரிமைகள் அவற்றை நாம் வழங்குகின்றோம் என சர்வதேச ரீதியாக பேசிவருகின்றார்கள் தற்போதுள்ள அரசிற்கு மக்கள் ஆணை கிடையாது ஜனநாயக ரீதியாக தேர்தலுக்கு வர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்மேலும்,  இந்த அரசானது இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.  அது மட்டுமன்றி வடக்கில் பன்சலைகளை நிர்மாணிக்கும் பொழுது காணிகள் நிர்மாணிக்கும் பொழுது நடைபெற்ற பிரச்சனைகளை நாங்கள் அவதானித்துள்ளோம்.  இது போன்ற செயற்பாட்டால் நாடு மிகவும் பின்னோக்கி தள்ளப்படும் இதற்கு உடனடி தீர்வு வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்மேலும் மக்களை அடக்குவதற்கான சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளனர் இதனை உடனடியாக இந்த அரசு நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement