மானிப்பாய் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியை ஒரு காடைத்தனமான கட்சி என்று தெரிவித்ததால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நேற்று ஆரம்பமானது. அதன்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் லே.ரமணன் ஜே.வி.பி காடைத்தனமான கட்சி என்று தெரிவித்தார். அதனால் கொதித்தெழுந்த ஜே.வி.பியின் விகிதாசார உறுப்பினரான வினோத் தனு, குறித்த வார்த்தை பிரயோகித்துக்கு எதிராக கூச்சலிட்டு சண்டையிட்டார்.
இதன்போது சபையில் சச்சரவு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் பலத்த முயற்சிக்கு பின்னர் தவிசாளர் சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
ஜே.வி.பி காடைத்தனமான கட்சி -வரிந்து கட்டி சண்டை போட்ட ஜே.வி.பி உறுப்பினர் மானிப்பாய் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியை ஒரு காடைத்தனமான கட்சி என்று தெரிவித்ததால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நேற்று ஆரம்பமானது. அதன்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் லே.ரமணன் ஜே.வி.பி காடைத்தனமான கட்சி என்று தெரிவித்தார். அதனால் கொதித்தெழுந்த ஜே.வி.பியின் விகிதாசார உறுப்பினரான வினோத் தனு, குறித்த வார்த்தை பிரயோகித்துக்கு எதிராக கூச்சலிட்டு சண்டையிட்டார். இதன்போது சபையில் சச்சரவு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் பலத்த முயற்சிக்கு பின்னர் தவிசாளர் சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.