• May 06 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தலைதூக்கும் அதிகாரப் பயங்கரவாதம்...! சிறிதரன் எம்.பி குற்றச்சாட்டு...!

Sharmi / Apr 4th 2024, 1:35 pm
image

Advertisement

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறிப்பதற்காக அதிகாரப் பயங்கரவாதம் இங்கு தலைதூக்கப்படுவதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும் அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக மக்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம்(03)  போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , போராட்டகாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தொடர்ந்து இயங்கவிடாமல் ஒரு சமூகம் தடுக்கும் முயற்சியானது என்பது மனிதாபிமானத்தையும் மனித உரிமைகளையும் மீறுகின்ற செயல் ஆகும்.

அம்பாறை மாவட்டம் என்பது தமிழர்கள் இங்கு நிரந்தரமாக வாழக் கூடாது அல்லது தமிழர்களை இங்கிருந்து துரத்தி அடிப்பதற்காக இன்னொரு சமூகம் மேற்கொள்கின்ற யுக்தி நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகத்தான் தெரிகின்றது.

பெருமளவான தமிழர்களும் குறிப்பிட்டளவு ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்ற  பிரதேசத்திலே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, பெருமளவான தமிழர்கள் வாழும் இப் பிரதேசம் மற்றும் அவர்களுடைய தொடர் நிலப்பரப்புக்கள் கொண்ட பிரதேசத்திலே அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள்.

அதேவேளை எமது கோரிக்கையாக இருப்பது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் பறிக்க கூடாது என்பதுதான்.

அதேவேளை கல்முனை தெற்கு பிரதேச செயலக அதிகாரங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரயோகிக்க கூடாது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் தமது கடமைகளை சுமூகமாக முன்னெடுப்பதற்கு இடையூறுகள் ஏற்படுத்த கூடாது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறிப்பதற்காக இங்கு அதிகார பயங்கரவாதம் மறைமுகமாக செலுத்தப்படுகின்றது. அதற்கு எதிராகவே இங்கு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் இங்கு போராடும் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டம் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தலைதூக்கும் அதிகாரப் பயங்கரவாதம். சிறிதரன் எம்.பி குற்றச்சாட்டு. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறிப்பதற்காக அதிகாரப் பயங்கரவாதம் இங்கு தலைதூக்கப்படுவதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும் அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக மக்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் நேற்றையதினம்(03)  போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , போராட்டகாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தொடர்ந்து இயங்கவிடாமல் ஒரு சமூகம் தடுக்கும் முயற்சியானது என்பது மனிதாபிமானத்தையும் மனித உரிமைகளையும் மீறுகின்ற செயல் ஆகும்.அம்பாறை மாவட்டம் என்பது தமிழர்கள் இங்கு நிரந்தரமாக வாழக் கூடாது அல்லது தமிழர்களை இங்கிருந்து துரத்தி அடிப்பதற்காக இன்னொரு சமூகம் மேற்கொள்கின்ற யுக்தி நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகத்தான் தெரிகின்றது.பெருமளவான தமிழர்களும் குறிப்பிட்டளவு ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்ற  பிரதேசத்திலே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அதேவேளை, பெருமளவான தமிழர்கள் வாழும் இப் பிரதேசம் மற்றும் அவர்களுடைய தொடர் நிலப்பரப்புக்கள் கொண்ட பிரதேசத்திலே அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள்.அதேவேளை எமது கோரிக்கையாக இருப்பது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் பறிக்க கூடாது என்பதுதான்.அதேவேளை கல்முனை தெற்கு பிரதேச செயலக அதிகாரங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரயோகிக்க கூடாது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் தமது கடமைகளை சுமூகமாக முன்னெடுப்பதற்கு இடையூறுகள் ஏற்படுத்த கூடாது.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறிப்பதற்காக இங்கு அதிகார பயங்கரவாதம் மறைமுகமாக செலுத்தப்படுகின்றது. அதற்கு எதிராகவே இங்கு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.இந்நிலையில் இங்கு போராடும் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டம் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement