• May 13 2024

ஐ.நா அமைதி காக்கும் பணிக்காக இலங்கையின் 15வது குழு பயணம்!

Chithra / Apr 4th 2024, 1:35 pm
image

Advertisement


லெபனான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் 15 வது பாதுகாப்பு படை குழு  நேற்று  லெபனான் புறப்பட்டது.

அக்குழுவில் பல இராணுவ படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் என 125 இராணுவ வீரர்கள் 114 உள்ளடங்குவர். 

குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன் கேணல் டி.கே.டி விதானகே ஆர்எஸ்பீ நியமிக்கப்பட்டுள்ளார். 

இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, 14 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளீன் பண்டாரநாயக்க மற்றும் இராணுவ போக்குவரத்து நிர்வாக பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் அனில் பெரேரா, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுவை வழியனுப்பினர்.


ஐ.நா அமைதி காக்கும் பணிக்காக இலங்கையின் 15வது குழு பயணம் லெபனான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் 15 வது பாதுகாப்பு படை குழு  நேற்று  லெபனான் புறப்பட்டது.அக்குழுவில் பல இராணுவ படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் என 125 இராணுவ வீரர்கள் 114 உள்ளடங்குவர். குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன் கேணல் டி.கே.டி விதானகே ஆர்எஸ்பீ நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, 14 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளீன் பண்டாரநாயக்க மற்றும் இராணுவ போக்குவரத்து நிர்வாக பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் அனில் பெரேரா, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுவை வழியனுப்பினர்.

Advertisement

Advertisement

Advertisement