• May 17 2024

தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்ற கல்முனை விளையாட்டுத்துறை!

Tamil nila / Dec 22nd 2022, 7:39 pm
image

Advertisement

இலங்கை அரச சேவைகள் விளையாட்டுத்துறை அமைப்பு நடாத்திய அரச சேவைகள் தேசிய விளையாட்டு விழாவில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின்  உடற்கல்வி ஆசிரியர் எம்.வை.எம். றகீப், விளையாட்டுத்துறை பயிற்று நர் ஏ. எம். ஜப்ரான் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றுள்ளனர்.


தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த  விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டிகளிலேயே அவர்கள்  பதக்கங்களை பெற்றுள்ளனர்.


ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கதை வென்ற றகீப், 4*100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற அணியிலும், 4*400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் அங்கம் வகித்துள்ளார்.


ஸாஹிரா கல்லூரியின் விளையாட்டுத்துறை பயிற்றுநர் ஏ.எம். ஜப்ரான் 4*100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற அணியிலும்,   4*400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில்  வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் அங்கம் வகித்துள்ளார்.  


இதேவேளை அக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் எம். எம். றஜீப் 100 மீற்றர் ஒட்டப் போட்டியிலும் நீளம் பாய்தல் போட்டியிலும் 4ஆம் இட த்தைப் பெற்றார்.


இது இவ்வாறிருக்க இப் போட்டியில் கல்வி திணைக்களத்தின் சார்பாக பங்குபற்றி கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களும், விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுமான எம். யூ. ஏ. சம்லி 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும்,  ஏ. ஜீ. எம். மஸ்பூத் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றதோடு, 4*100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும், 4*400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் 2ம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்ற கல்முனை விளையாட்டுத்துறை இலங்கை அரச சேவைகள் விளையாட்டுத்துறை அமைப்பு நடாத்திய அரச சேவைகள் தேசிய விளையாட்டு விழாவில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின்  உடற்கல்வி ஆசிரியர் எம்.வை.எம். றகீப், விளையாட்டுத்துறை பயிற்று நர் ஏ. எம். ஜப்ரான் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றுள்ளனர்.தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த  விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டிகளிலேயே அவர்கள்  பதக்கங்களை பெற்றுள்ளனர்.ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கதை வென்ற றகீப், 4*100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற அணியிலும், 4*400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் அங்கம் வகித்துள்ளார்.ஸாஹிரா கல்லூரியின் விளையாட்டுத்துறை பயிற்றுநர் ஏ.எம். ஜப்ரான் 4*100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற அணியிலும்,   4*400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில்  வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் அங்கம் வகித்துள்ளார்.  இதேவேளை அக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் எம். எம். றஜீப் 100 மீற்றர் ஒட்டப் போட்டியிலும் நீளம் பாய்தல் போட்டியிலும் 4ஆம் இட த்தைப் பெற்றார்.இது இவ்வாறிருக்க இப் போட்டியில் கல்வி திணைக்களத்தின் சார்பாக பங்குபற்றி கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களும், விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுமான எம். யூ. ஏ. சம்லி 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும்,  ஏ. ஜீ. எம். மஸ்பூத் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றதோடு, 4*100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும், 4*400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் 2ம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement