• Sep 20 2024

ரஷ்யாவின் செயல் மனிதகுலத்திற்கு எதிரானது - குற்றம் சுமத்தும் கமலா ஹாரிஸ்! SamugamMedia

Tamil nila / Feb 19th 2023, 9:39 pm
image

Advertisement

உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை ரஷ்யா செய்வதாக கமலா ஹாரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.


ஜேர்மனியின் மூனிச் நகரில் இடம்பெற்ற ''மூனிச் பாதுகாப்பு மாநாட்டில்'' அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார்.


அப்போது அவர் உக்ரைனுக்கு எதிராக போர் புரிந்துவரும் ரஷ்யாவை கடுமையாக சாடினார்.


போர் குறித்து கமலா ஹாரிஸ் கூறுகையில், '


உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்த விடயங்களில் நாங்கள் ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளோம்.


சட்டத் தரங்களை நாங்கள் அறிவோம். எந்த சந்தேகமும் இல்லை, இவை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்.' என தெரிவித்தார். 


மேலும், கொடூரமான கொலை, சித்திரவதை, பாலியல் அத்துமீறல் மற்றும் நாடு கடத்தல் போன்ற செயல்களை ரஷ்யா புரிந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


ரஷ்யாவின் செயல் மனிதகுலத்திற்கு எதிரானது - குற்றம் சுமத்தும் கமலா ஹாரிஸ் SamugamMedia உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை ரஷ்யா செய்வதாக கமலா ஹாரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.ஜேர்மனியின் மூனிச் நகரில் இடம்பெற்ற ''மூனிச் பாதுகாப்பு மாநாட்டில்'' அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார்.அப்போது அவர் உக்ரைனுக்கு எதிராக போர் புரிந்துவரும் ரஷ்யாவை கடுமையாக சாடினார்.போர் குறித்து கமலா ஹாரிஸ் கூறுகையில், 'உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்த விடயங்களில் நாங்கள் ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளோம்.சட்டத் தரங்களை நாங்கள் அறிவோம். எந்த சந்தேகமும் இல்லை, இவை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்.' என தெரிவித்தார். மேலும், கொடூரமான கொலை, சித்திரவதை, பாலியல் அத்துமீறல் மற்றும் நாடு கடத்தல் போன்ற செயல்களை ரஷ்யா புரிந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement