• May 18 2024

மியன்மாரில் கண்ணிவெடிகளால் பாதிக்கப்படும் சிறுவர்கள்! SamugamMedia

Tamil nila / Feb 19th 2023, 10:06 pm
image

Advertisement

மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கண்ணிவெடிகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


அண்மையில் 3 வயது சிறுவன் கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 


1997 ஆம் ஆண்டு கண்ணிவெடி தடை ஒப்பந்தம் ஐக்கிய நாடுகளின் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு  பெரும்பாலான நாடுகள் உடன்பட்டன. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்காத மியன்மாரில், தற்போது கண்ணிவெடிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 


மியன்மாரில் அரசாங்கத்திடம் இருந்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பெருமளவான இடங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஆபத்தான எண்ணிக்கையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. 


இராணுவம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுதுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கண்ணிவெடி பயன்படுத்தியதை மியன்மார் இராணுவம் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  


மியன்மாரில் கண்ணிவெடிகளால் பாதிக்கப்படும் சிறுவர்கள் SamugamMedia மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கண்ணிவெடிகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அண்மையில் 3 வயது சிறுவன் கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 1997 ஆம் ஆண்டு கண்ணிவெடி தடை ஒப்பந்தம் ஐக்கிய நாடுகளின் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு  பெரும்பாலான நாடுகள் உடன்பட்டன. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்காத மியன்மாரில், தற்போது கண்ணிவெடிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மியன்மாரில் அரசாங்கத்திடம் இருந்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பெருமளவான இடங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஆபத்தான எண்ணிக்கையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இராணுவம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுதுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கண்ணிவெடி பயன்படுத்தியதை மியன்மார் இராணுவம் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement