கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 6 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 8.45 மணியளவில் பாரிய பாறையொன்றுடன் மண்மேடு சரிந்தது. இதன்போது வீடும், உணவகமும் முற்றாகச் சேதமடைந்தன.
மண்ணுக்குள் சிக்குண்டவர்களில் ஒருவரின் சடலம் ஆரம்பத்தில் மீட்கப்பட்டது. மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மாவனல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
மண்ணுக்குள் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் 10 மணி நேர மீட்புப் பணியின்போது மேலும் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
அந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கை இன்று இரவு 7 மணியுடன் நிறுத்தப்பட்டது.
இராணுவம், தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடும் மழை பெய்து வந்த நிலையிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.சம்பவத்தின்போது உணவகத்துக்குள் பலர் இருந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் எனத் தெரியவருகின்றது.
கண்டி கடுகன்னாவ மண்சரிவு - 6 பேர் உயிரிழப்பு கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 6 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.இன்று காலை 8.45 மணியளவில் பாரிய பாறையொன்றுடன் மண்மேடு சரிந்தது. இதன்போது வீடும், உணவகமும் முற்றாகச் சேதமடைந்தன.மண்ணுக்குள் சிக்குண்டவர்களில் ஒருவரின் சடலம் ஆரம்பத்தில் மீட்கப்பட்டது. மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மாவனல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.மண்ணுக்குள் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் 10 மணி நேர மீட்புப் பணியின்போது மேலும் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.அந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கை இன்று இரவு 7 மணியுடன் நிறுத்தப்பட்டது.இராணுவம், தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.கடும் மழை பெய்து வந்த நிலையிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.சம்பவத்தின்போது உணவகத்துக்குள் பலர் இருந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் எனத் தெரியவருகின்றது.