• May 21 2024

கண்வைத்தது சீனா!! பறிபோகும் இலங்கையின் தேவேந்திர முனை! samugammedia

Chithra / Apr 9th 2023, 12:00 pm
image

Advertisement

இலங்கையின் தேவேந்திர முனை பகுதியில் ரேடார் அமைப்பை அமைப்பதற்கு அனுமதி கோரி இலங்கைக்கு முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்க சீனா தயாராகி வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறு முன்மொழியப்பட்டால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நடத்தை மற்றும் இந்திய கடற்படையின் செயல்பாடுகளை கண்காணிப்பதே அதன் நோக்கம் என எகனாமிக் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பதே முன்மொழியப்பட்ட ரேடார் அமைப்பின் மற்ற நோக்கம் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ரேடார் அமைப்பு நிறுவப்பட்டால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரை கண்காணிக்கும் திறன் கிடைக்கும் என்றும், சீன அறிவியல் அகாடமியின் விண்வெளி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த திட்டத்தை வழிநடத்தும் என்றும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.


கண்வைத்தது சீனா பறிபோகும் இலங்கையின் தேவேந்திர முனை samugammedia இலங்கையின் தேவேந்திர முனை பகுதியில் ரேடார் அமைப்பை அமைப்பதற்கு அனுமதி கோரி இலங்கைக்கு முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்க சீனா தயாராகி வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அவ்வாறு முன்மொழியப்பட்டால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நடத்தை மற்றும் இந்திய கடற்படையின் செயல்பாடுகளை கண்காணிப்பதே அதன் நோக்கம் என எகனாமிக் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பதே முன்மொழியப்பட்ட ரேடார் அமைப்பின் மற்ற நோக்கம் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.இந்த ரேடார் அமைப்பு நிறுவப்பட்டால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரை கண்காணிக்கும் திறன் கிடைக்கும் என்றும், சீன அறிவியல் அகாடமியின் விண்வெளி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த திட்டத்தை வழிநடத்தும் என்றும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement