• Apr 27 2024

செயற்பாட்டிலிருந்து அகற்றக்கப்படும் களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம்! மின்கட்டணம் குறையுமா..? அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Oct 5th 2023, 8:34 am
image

Advertisement

  

அதிக உற்பத்திச் செலவு காரணமாக களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் செயற்பாட்டில் இருந்து அகற்றக்கப்பட வேண்டும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றில் தெரிவித்தார்.

2020ம் ஆண்டிலேயே, குறித்த மின் நிலையம் அகற்றப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

களனிதிஸ்ஸ நிலையத்தில் ஒரு அலகு மின்சார உற்பத்திக்கான செலவு 144 ரூபாயாக உள்ளது.

இதேவேளை, சூரிய மற்றும் காற்றாலை மூலம் 4 ஆயிரத்து 700 மெகாவோட் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளன.

இது மின்சாரக் கட்டணத்தை குறைக்க உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்

விக்டோரியா, ரன்தம்பே, ரந்தெனிகல மற்றும் ஏனைய நீர்த்தேக்கங்களில் நீர் மின் உற்பத்தியை ஆரம்பிக்க போதுமான மழை பெய்யவில்லை.

இந்தநிலையில் மின்சார உற்பத்தியில் ஏற்படும் செலவை ஈடுகட்ட மின்சார கட்டண திருத்தம் அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

செயற்பாட்டிலிருந்து அகற்றக்கப்படும் களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மின்கட்டணம் குறையுமா. அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia   அதிக உற்பத்திச் செலவு காரணமாக களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் செயற்பாட்டில் இருந்து அகற்றக்கப்பட வேண்டும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றில் தெரிவித்தார்.2020ம் ஆண்டிலேயே, குறித்த மின் நிலையம் அகற்றப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.களனிதிஸ்ஸ நிலையத்தில் ஒரு அலகு மின்சார உற்பத்திக்கான செலவு 144 ரூபாயாக உள்ளது.இதேவேளை, சூரிய மற்றும் காற்றாலை மூலம் 4 ஆயிரத்து 700 மெகாவோட் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளன.இது மின்சாரக் கட்டணத்தை குறைக்க உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்விக்டோரியா, ரன்தம்பே, ரந்தெனிகல மற்றும் ஏனைய நீர்த்தேக்கங்களில் நீர் மின் உற்பத்தியை ஆரம்பிக்க போதுமான மழை பெய்யவில்லை.இந்தநிலையில் மின்சார உற்பத்தியில் ஏற்படும் செலவை ஈடுகட்ட மின்சார கட்டண திருத்தம் அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement