• Apr 27 2024

யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!

Sharmi / Jan 21st 2023, 8:31 pm
image

Advertisement

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் 89 அணி மாணவனும் அமெரிக்காவின் University of South Dakota இனது Sanford School of Medicine இன் சத்திர சிகிச்சை கற்கைகளுக்கான பேராசிரியரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமாகிய பேராசிரியர் தம்பிப்பிள்ளை தவச்சேந்தனதும் (Prof Thav Thambi-Pillai) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் வைத்தியத் துறையினரதும் பங்கேற்புடன் கடந்த 18.01.2023 புதன் காலை முதல் மாலை வரை சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

17 வயதான பெண் பிள்ளை ஒருவருக்கு அவரது தாயார் உடனடியாக தானம் செய்ய அது பொருத்தப்பட்டது எனத் தெரியவருகிறது. இவ்வாறு உயிருடன் இருக்கும் ஒருவரிடம் பெற்று மற்றையவருக்கு பொருத்துவது  மருத்துவ வளர்ச்சியின் மைல் கல்லாக அமைந்துள்ளது. 

IMHO (International Medical and Health Organisation) இன் பங்களிப்புடன் புத்துருவாக்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூடத்தில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் குறித்த சத்திரச் சிகிச்சையை மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் 89 அணி மாணவனும் அமெரிக்காவின் University of South Dakota இனது Sanford School of Medicine இன் சத்திர சிகிச்சை கற்கைகளுக்கான பேராசிரியரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமாகிய பேராசிரியர் தம்பிப்பிள்ளை தவச்சேந்தனதும் (Prof Thav Thambi-Pillai) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் வைத்தியத் துறையினரதும் பங்கேற்புடன் கடந்த 18.01.2023 புதன் காலை முதல் மாலை வரை சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 17 வயதான பெண் பிள்ளை ஒருவருக்கு அவரது தாயார் உடனடியாக தானம் செய்ய அது பொருத்தப்பட்டது எனத் தெரியவருகிறது. இவ்வாறு உயிருடன் இருக்கும் ஒருவரிடம் பெற்று மற்றையவருக்கு பொருத்துவது  மருத்துவ வளர்ச்சியின் மைல் கல்லாக அமைந்துள்ளது. IMHO (International Medical and Health Organisation) இன் பங்களிப்புடன் புத்துருவாக்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூடத்தில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் குறித்த சத்திரச் சிகிச்சையை மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement