• Jan 10 2025

கிளிநொச்சி, ஏ 35 பிரதான வீதியில் : பாதுகாப்பு சீர் செய்யப்பட்ட பாலம்

Tharmini / Jan 4th 2025, 12:29 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதானவீதியின் புளியம்பொக்கனையில் அமைந்திருந்த பாலத்தின் பாதுகாப்பு சீர் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு குறியீடுகளோ, மின்விளக்குகளோ பொருத்தப்படாமல் இருந்தது.

இதன் காரணமாகவ கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதனை அடுத்து நேற்று (03) அப்பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் பார்வையிட்டார். 

அவரது பணிப்புரைக்கு அமைவாக பாலத்தின் இரு பகுதியிலும் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளதுடன் வீதி பாதுகாப்பு குறிகாட்டிகளும் பொருத்தப்பட்டுள்ளது. 

தற்பொழுது மக்கள் பாதுகாப்பாக பயணிக்க கூடிய வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



கிளிநொச்சி, ஏ 35 பிரதான வீதியில் : பாதுகாப்பு சீர் செய்யப்பட்ட பாலம் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதானவீதியின் புளியம்பொக்கனையில் அமைந்திருந்த பாலத்தின் பாதுகாப்பு சீர் செய்யப்பட்டுள்ளது.குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு குறியீடுகளோ, மின்விளக்குகளோ பொருத்தப்படாமல் இருந்தது.இதன் காரணமாகவ கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதனை அடுத்து நேற்று (03) அப்பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் பார்வையிட்டார். அவரது பணிப்புரைக்கு அமைவாக பாலத்தின் இரு பகுதியிலும் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளதுடன் வீதி பாதுகாப்பு குறிகாட்டிகளும் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மக்கள் பாதுகாப்பாக பயணிக்க கூடிய வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement