• May 13 2024

கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம்...!முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு...!samugammedia

Sharmi / Apr 26th 2023, 3:12 pm
image

Advertisement

கிளிநொச்சி  மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றைய தினம்(26-04-2023) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மு.ப 10.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர்; தலைமையில் நடைபெற்றது.

கிளிநொச்சி  மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை மற்றும் மாவட்டத்தில்   செயற்படுத்தப்பட்டு வரும்  விவசாய நடவடிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு 2023 ஆண்டுக்கான அனைத்து விவசாய திட்டங்கள்  மற்றும் செயற்படுத்தல் என பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கைமற்றும்  , ஏனைய உபஉணவு பயிர்ச்செய்கை , வீடுத்தோட்டம், விலங்கு வளர்ப்பு முதலிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 2023 ஆம் ஆண்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த கூட்டத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சிறிமோகனன் (நிர்வாகம் ), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் லிங்க நாதன்  (காணி ),
பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர்,நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகள், தெங்கு பயிர்ச்செய்கை சபையின் அதிகாரிகள், நெல் ஆராட்சி நிலையத்தின் அதிகாரிகள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் ,  உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம்.முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு.samugammedia கிளிநொச்சி  மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றைய தினம்(26-04-2023) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மு.ப 10.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர்; தலைமையில் நடைபெற்றது.கிளிநொச்சி  மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை மற்றும் மாவட்டத்தில்   செயற்படுத்தப்பட்டு வரும்  விவசாய நடவடிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு 2023 ஆண்டுக்கான அனைத்து விவசாய திட்டங்கள்  மற்றும் செயற்படுத்தல் என பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கைமற்றும்  , ஏனைய உபஉணவு பயிர்ச்செய்கை , வீடுத்தோட்டம், விலங்கு வளர்ப்பு முதலிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 2023 ஆம் ஆண்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.இன்றைய இந்த கூட்டத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சிறிமோகனன் (நிர்வாகம் ), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் லிங்க நாதன்  (காணி ), பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர்,நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகள், தெங்கு பயிர்ச்செய்கை சபையின் அதிகாரிகள், நெல் ஆராட்சி நிலையத்தின் அதிகாரிகள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் ,  உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement