• Jan 24 2025

வெளிமாவட்ட வியாபாரிகளால் பாதிக்கப்படும் கிளிநொச்சி வர்த்தகர்கள் - வெளியேற்றுமாறு கோரி போராட்டம்

Chithra / Jan 23rd 2025, 1:10 pm
image


வெளிமாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் இன்று தமது வர்த்தக நிலையங்களை மூடி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத்தினர், 

மெகா சேல்ஸ் என கூறி கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வர்த்தகர்களின் வியாபாரத்திலும் அவர்களது வாழ்வாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். 

எனவே உடனடியாக அவர்கள் இப்பகுதியில் இருந்து மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இதன் போது மாவட்ட அரச அதிபர் தெரிவிக்கையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்று தருவதாக கூறினார்.


வெளிமாவட்ட வியாபாரிகளால் பாதிக்கப்படும் கிளிநொச்சி வர்த்தகர்கள் - வெளியேற்றுமாறு கோரி போராட்டம் வெளிமாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் இன்று தமது வர்த்தக நிலையங்களை மூடி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத்தினர், மெகா சேல்ஸ் என கூறி கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வர்த்தகர்களின் வியாபாரத்திலும் அவர்களது வாழ்வாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே உடனடியாக அவர்கள் இப்பகுதியில் இருந்து மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.இதன் போது மாவட்ட அரச அதிபர் தெரிவிக்கையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்று தருவதாக கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement