• Nov 06 2024

முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச போர் விதியா? சபா.குகதாஸ் கேள்வி

Sharmi / Jul 18th 2024, 11:59 am
image

Advertisement

இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச போர் விதியா? என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி யெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தென் மாகாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இறுதிப் போர் பற்றி விடையங்களில் உண்மைக்கு மாறான கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாக தங்கள் இராணுவம் போரிட்டதாக கூறியுள்ளார்.

போர் நடைபெறும் போது சர்வதேச தொண்டு நிறுவனங்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றியதுடன்  சர்வதேச சட்டங்களில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி அப்பாவிப் பொது மக்களை கொன்றொழித்தமை, முல்லைத்தீவு சுதந்திரபுரத்திற்கு மக்களை செல்லுமாறு அறிவித்து விட்டு வெள்ளைக் கொடியை பறக்கவிட்டு மரங்களுக்கு கீழ் கூடியிருந்த மக்களை விமான தாக்குதலில் கொன்றொழித்தமை, முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுப் படுகொலை செய்தமை, சரணடைந்த சகோதரி இசைப்பிரியாவை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்டுத்தி படுகொலை செய்தமை யாவும் சர்வதேச  சட்ட விதிமுறையா?

இறுதிப் போரில் நாற்பதாயிரம் மக்கள் கொல்லபட்ட தகவல் போலியானது அப்படி என்றால் எலும்புக் கூடுகள் எங்கே? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் சரத் பொன்சேகா.

தருஸ்மன் அறிக்கை இறுதிப் போர்க்களப் பார்வையின் பின்னரே வெளிவந்தது அவ் அறிக்கையில் நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது அறிக்கை வந்து 14 ஆண்டுகள் கடந்தபின் பித்தலாட்டம் விடும் பொன்சேகா ஏன் தருஸ்மன் அறிக்கையாளரிடம் பிழையை சுட்டிக் காட்டவில்லை?

முன்னாள் மனிதவுரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இறுதிப் போர்க்களத்தை பார்வையிட வருகிறார் என்றதும் முள்ளிவாய்க்காலில் குவிந்து கிடந்த படுகொலை செய்யப்பட்ட  பொது மக்களின் எச்சங்கள் எவ்வாறு மாயமாக மறைந்தன என அக்காலப் பகுதியில் ஊகங்களில் உண்மைகள் வெளிவந்துள்ளதாகவும் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச போர் விதியா சபா.குகதாஸ் கேள்வி இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச போர் விதியா என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி யெழுப்பியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தென் மாகாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இறுதிப் போர் பற்றி விடையங்களில் உண்மைக்கு மாறான கருத்துக்களை முன் வைத்துள்ளார்.சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாக தங்கள் இராணுவம் போரிட்டதாக கூறியுள்ளார். போர் நடைபெறும் போது சர்வதேச தொண்டு நிறுவனங்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றியதுடன்  சர்வதேச சட்டங்களில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி அப்பாவிப் பொது மக்களை கொன்றொழித்தமை, முல்லைத்தீவு சுதந்திரபுரத்திற்கு மக்களை செல்லுமாறு அறிவித்து விட்டு வெள்ளைக் கொடியை பறக்கவிட்டு மரங்களுக்கு கீழ் கூடியிருந்த மக்களை விமான தாக்குதலில் கொன்றொழித்தமை, முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுப் படுகொலை செய்தமை, சரணடைந்த சகோதரி இசைப்பிரியாவை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்டுத்தி படுகொலை செய்தமை யாவும் சர்வதேச  சட்ட விதிமுறையாஇறுதிப் போரில் நாற்பதாயிரம் மக்கள் கொல்லபட்ட தகவல் போலியானது அப்படி என்றால் எலும்புக் கூடுகள் எங்கே என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் சரத் பொன்சேகா.தருஸ்மன் அறிக்கை இறுதிப் போர்க்களப் பார்வையின் பின்னரே வெளிவந்தது அவ் அறிக்கையில் நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது அறிக்கை வந்து 14 ஆண்டுகள் கடந்தபின் பித்தலாட்டம் விடும் பொன்சேகா ஏன் தருஸ்மன் அறிக்கையாளரிடம் பிழையை சுட்டிக் காட்டவில்லைமுன்னாள் மனிதவுரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இறுதிப் போர்க்களத்தை பார்வையிட வருகிறார் என்றதும் முள்ளிவாய்க்காலில் குவிந்து கிடந்த படுகொலை செய்யப்பட்ட  பொது மக்களின் எச்சங்கள் எவ்வாறு மாயமாக மறைந்தன என அக்காலப் பகுதியில் ஊடகங்களில் உண்மைகள் வெளிவந்துள்ளதாகவும் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement