திருகோணமலை - தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி வயல் நிலப் பகுதியில் இன்று (19) மாலை தீ மூட்டியதால் குறித்த பகுதி புகையால் மூடப்பட்டு பிரதான வீதியினூடான போக்குவரத்தும் தடைப்பட்டது.
நெல் அறுவடை முடிவடைந்த நிலையில் வயல் பகுதிகளில் விவசாயிகளினால் இந்த மோசமான வயல் பகுதி தீ வைப்பு காரணமாக குறித்த பகுதி குடியிருப்பாளர்கள் ,வீதி பயணிகள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாறான நிலை குறித்தும் இதன் தாக்கம் பற்றியும் உரிய அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான வீதியை அண்மித்த குறித்த வயல் நிலப் பகுதியில் தீ வைப்பு நடவடிக்கையால் அதிக புகை வெளியேற்றப்பட்டு சுவாச நோய் உள்ளிட்ட பல இடர்களை எதிர்நோக்கலாம்.
வயலில் தீ மூட்டியதன் பிற்பாடு வயலின் உரிமையாளர்கள் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். பின்னர் அதிக காற்றழுத்தம் காரணமாக வேகமாக எரியப்பட்டு அங்கும் இங்கும் அதிகமான புகை வெளியேற்றப்படுகிறது.
எனவே இது தொடர்பில் விவசாயிகளும் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகையால் மூடப்பட்ட கிண்ணியா வீதி; வயலுக்கு தீ மூட்டியதால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து திருகோணமலை - தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி வயல் நிலப் பகுதியில் இன்று (19) மாலை தீ மூட்டியதால் குறித்த பகுதி புகையால் மூடப்பட்டு பிரதான வீதியினூடான போக்குவரத்தும் தடைப்பட்டது.நெல் அறுவடை முடிவடைந்த நிலையில் வயல் பகுதிகளில் விவசாயிகளினால் இந்த மோசமான வயல் பகுதி தீ வைப்பு காரணமாக குறித்த பகுதி குடியிருப்பாளர்கள் ,வீதி பயணிகள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான நிலை குறித்தும் இதன் தாக்கம் பற்றியும் உரிய அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரதான வீதியை அண்மித்த குறித்த வயல் நிலப் பகுதியில் தீ வைப்பு நடவடிக்கையால் அதிக புகை வெளியேற்றப்பட்டு சுவாச நோய் உள்ளிட்ட பல இடர்களை எதிர்நோக்கலாம்.வயலில் தீ மூட்டியதன் பிற்பாடு வயலின் உரிமையாளர்கள் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். பின்னர் அதிக காற்றழுத்தம் காரணமாக வேகமாக எரியப்பட்டு அங்கும் இங்கும் அதிகமான புகை வெளியேற்றப்படுகிறது.எனவே இது தொடர்பில் விவசாயிகளும் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.