• Jun 20 2026

கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினராக கிட்டினபிள்ளை சிவகுரு நியமனம்!

shanu / Jun 20th 2026, 2:22 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச சபையில் வெற்றிடமாகியிருந்த உறுப்பினர் பதவிக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் கிட்டினபிள்ளை சிவகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கரைதுறைபற்று பிரதேச கிளையின் பதில் தலைவராகவும், முல்லைத்தீவு மாவட்ட எல்லைக் கிராமங்கள் அடங்கிய கரிகட்டுமூலை தெற்கு வட்டாரக் கிளையின் தலைவராகவும் செயற்பட்டு வரும் கிட்டினபிள்ளை சிவகுரு, கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


நீண்டகாலமாக கட்சியின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகளை முன்னிறுத்திய சமூகப் பணிகளுக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த அவர், இந்நியமனத்தின் மூலம் கரைதுறைபற்று பிரதேச சபையில் மக்களின் பிரதிநிதியாக தனது சேவையை தொடரவுள்ளார்.


இந்நியமனம் தொடர்பாக கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுவதுடன், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினராக கிட்டினபிள்ளை சிவகுரு நியமனம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச சபையில் வெற்றிடமாகியிருந்த உறுப்பினர் பதவிக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் கிட்டினபிள்ளை சிவகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கரைதுறைபற்று பிரதேச கிளையின் பதில் தலைவராகவும், முல்லைத்தீவு மாவட்ட எல்லைக் கிராமங்கள் அடங்கிய கரிகட்டுமூலை தெற்கு வட்டாரக் கிளையின் தலைவராகவும் செயற்பட்டு வரும் கிட்டினபிள்ளை சிவகுரு, கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.நீண்டகாலமாக கட்சியின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகளை முன்னிறுத்திய சமூகப் பணிகளுக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த அவர், இந்நியமனத்தின் மூலம் கரைதுறைபற்று பிரதேச சபையில் மக்களின் பிரதிநிதியாக தனது சேவையை தொடரவுள்ளார்.இந்நியமனம் தொடர்பாக கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுவதுடன், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement