• May 12 2024

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி ரேடார் மூலம் ஆய்வு...! நீதிமன்றிடம் அனுமதி கோரி விண்ணப்பம்...!samugammedia

Sharmi / Nov 11th 2023, 12:02 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் எதுவரை உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதனைக் கண்டறிய ரேடாரைப் பயன்படுத்த நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.


கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி அகழ்வும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தொல்லியல் அதிகாரிகள், சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

இம்முறை இடம்பெறும் அகழ்வில் துறைசார் நிபுணர்களை மேலதிகமாகப் பயன்படுத்தி அகழ்வைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேநேரம் நிலத்தின் கீழ் எதுவரை மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதனைக் கண்டறியும் ரேடாரைப் பயன்படுத்த நீதிமன்றிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.



கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி ரேடார் மூலம் ஆய்வு. நீதிமன்றிடம் அனுமதி கோரி விண்ணப்பம்.samugammedia முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் எதுவரை உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதனைக் கண்டறிய ரேடாரைப் பயன்படுத்த நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி அகழ்வும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.தொல்லியல் அதிகாரிகள், சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.இம்முறை இடம்பெறும் அகழ்வில் துறைசார் நிபுணர்களை மேலதிகமாகப் பயன்படுத்தி அகழ்வைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேநேரம் நிலத்தின் கீழ் எதுவரை மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதனைக் கண்டறியும் ரேடாரைப் பயன்படுத்த நீதிமன்றிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement