• Sep 22 2024

அம்பிட்டிய தேரர் போன்ற பௌத்த தேரர்கள் சட்டசபைக்கு மேலானவர்களா? முஷாரப் எம்பி கேள்வி...!samugammedia

Anaath / Nov 11th 2023, 12:10 pm
image

Advertisement

அம்பிட்டிய தேரர் இனவாத கருத்துக்களை முன்வைத்ததிலிருந்து இதுவரை அவருக்கு தண்டனை வளங்காமல்  இருப்பது சட்டசபை பௌத்த தேரர்களுக்கு அடிபணிவதனை குறிப்பதாக  கௌரவ சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான. எஸ். எம். எம். முஷாரப்  தெரிவித்துள்ளார்.

 குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 4ஆம் நாள் விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

 குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பேசும் போது  வடகிழக்கு மாகாணங்களில் நடக்கின்ற சில இனவாத செயல்பாடுகள் தொடர்பில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார். அவரினுடைய இந்த கருத்தினை நான்  ஆமோதிக்கின்றேன். வடக்கு கிழக்கை பொறுத்த அளவிலே சில பௌத்த துறவிகளினுடைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருக்கின்றன.

மட்டக்களப்பை சேர்ந்த ஒரு தேரர் அண்மையில் பேசுகிற  போது தமிழ்  மக்களை அவர்கள் எவராக இருந்தாலும் சரி தமிழ் மக்களை  கண்டம்  துண்டமாக வெட்டுவேன் என்று எச்சரிக்கையை அவர் வீடியோ காணொளி ஊடாக அவர் விடுத்திருந்தார். அவ்வாறு கண்டம் துண்டமாக  வெட்டுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ள பிக்கு இன்றுவரை கைது செய்யப்படவில்லை. அவருக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் எந்த நாட்டிலே ஒரு சட்ட ஆட்சி நடக்கிறதா என்ற ஒரு கேள்வி இருக்கிறது. 

உண்மையிலே ஒரு பொருளாதார கெடுபிடிக்குள் இந்நாடு சின்னாபின்னமாகிய நிலைக்குள் இருந்து இந்த நாடு ஓரளவுக்கு நாங்கள் மூச்சுவிடக்கூடிய இந்த சூழலிலே  மீண்டும் இனவாத ரீதியிலான செயற்பாடுகளை உருவாக்கும் வண்ணமான செயல்பாடுகள் தொடர்ந்தும் இந்த வட கிழக்கிலே நடந்து வருகிறது. எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த நாட்டிலே இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்த  ஜனாதிபதி அவர்களை நான் பாராட்டுகிற அதே வேளையிலே இந்த இனவாத ரீதியான போக்குடையவர்களை அடக்கி ஆள்வதற்கு இந்த சட்டம் பயன்படுத்த வேண்டும் என்பதை சட்டத்தை உருவாக்கிய இந்த உயரிய சபையிலே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். 

சாதாரணமாக அவர் பேசுகிற முறைமையை பார்த்தாலே அவர் எத்தகையவர் என்பதை புரிந்து கொள்ள முடியும். இன்று மட்டக்களப்பில் இனவாதத்தை பொறுத்த அளவிலே பல்வேறு கருத்துக்களை வெளி யிடுவதும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை  வெளியிடுவதும் அதனை யாரும் இன்று ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு ஒப்பவே தான் நான் இருக்கின்ற அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் கூட ஒரு பௌத்த துறவி எங்களுடைய பிரதேசத்தை மையப்படுத்தி பல்வேறு விடயங்களின் ஊடாக அந்த மக்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தார். அதனை நாம் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இறைவனுக்கு முதலில் நன்றி. அரசாங்கமும் அதற்கு தேவையான சில நியாயங்களை புரிந்து கொள்வதற்கு உதவி செய்தது. 

அதே சமயத்தில் அவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கண்ட இடங்களெல்லாம் சென்று அது தங்களுக்கு உரியது, தொல்லியல் திணைக்களத்துக்கு உரியது,  அல்லது வனாந்தரத்துக்கு உரியது, இந்த வனாந்தரத்தை  மக்கள் அளிக்கின்றார் என்பதாக எல்லாம்  மிக பொய்யான கருத்துகளையும்  கட்டுக்கதைகளையும் கட்டுக்கதைகளையும் சொல்வதை  இன்று தேசிய ஊடகங்களில் இவ்வாறான செய்திகளை நாம் பரப்புகின்றதை நாம் பார்க்கின்றோம்.

இன்று இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற அபத்தம் என்ன என்றால்  ஒரு செய்தியினுடைய உண்மைத்தன்மை பற்றி அறிவதற்கான ஒரு முகாந்திரம் இல்லை. ஒரு செய்தியை சொல்கிறபோது அது தொலைக்காட்சியாக இருக்கலாம், பத்திரிகையாக இருக்கலாம், அந்த பத்திரிகைகளும் செய்திகளுக்கும் அந்த செய்திகளை வெளியிடுகின்றன. 

செய்திகளை வெளியிட்டால் இவர்களுக்கான தண்டனை என்ன? என்பது பற்றிய ஒரு முறைமைப்டுத்துதல் ஒன்று எங்கு தேவைப்படுகிறது. ஒரு முகாமைத்துவம் அல்லது ஒரு ஒழுங்கு படுத்தல் முறை ஒன்று தேவை.

அண்மையில் ஊடகங்களை ஒழுங்குபடுத்தல் முறை பற்றி ஜனாதிபதி அவர்கள் புதிய சட்டமூலத்தை கொண்டு வருவது பற்றி பேசிய போது உடனடியாக ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் சிலர் கிளர்ந்தெழுந்துவிடுவர். இந்த ஊடகம் நிச்சயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். 

ஒருவர் விரும்பியவாறு ஒரு செய்தியை பரப்பி அந்த செய்தியினூடாக நல்லவரை கெட்டவராகவோ அல்லது இல்லாத நிலையை எடுத்து சொல்கிற நிலைமை இந்த நாட்டிலே ஒரு அபத்தமான நிலைமை. எனவே அந்த நிலைமை மாற்றம் பெற வேண்டும். 

அண்மையில் எமது பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன் பில  பொத்துவிலுக்கு விஜயம் செய்த நிலையில்  பகுதிக்கு சென்று அங்கெ உள்ள பகுதிக்கு சென்று மிக தவறான பொய்யான கருத்துக்களை எல்லாம் அந்த குறிப்பிட்ட பௌத்த பிக்குவை வைத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட பகுதியை மக்கள் அளிக்கிறார்கள். அங்கே DIG க்கு 10 ஏக்கர் காணி இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணி இருக்கிறது. என்பதாக மிக பச்சைப் பொய்யான கருத்துக்களை முன்வைத்தார். அதன் பின்னர் இந்த பாராளுமன்றத்துக்கு வந்து அவரிடம் நேரடியாக சந்தித்து உட்கார வைத்து நான் அவரிடம் பேசினேன். 

நீங்கள் பேசிய இந்த விடயத்தில் நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள், படித்த ஒரு கற்று தேர்ந்த ஒருவராக இருக்கிறீர்கள் ஆனால் உண்மை நிலை எது என்று தெரியாமல் யாரோ ஒருவர் சொல்வதை கொண்டு நீங்கள் ஒரு கருத்திற்கும் பொது வெளியில் வெளியிட்டு நாடிட்குக்குள் ஒரு பிளவிற் உண்டுபண்ண முயற்சிக்கிறீர்கள். மூன்று இனமும் சந்தோசமாக ஒற்றுமையாக வாழ்கிற ஒற்றுமையாக வாழ்கிற ஊருக்குள் ஒரு பிரச்சினையை உருவாக்க பார்க்கிறீர்கள். இது மிக பாரதூரமான விடயம் என்பதாக நான் கூறுகின்ற போது அவர் கூறிய விடயத்தினுடைய தவறினை உணர்ந்து கொண்டார். 

மேலும் இந்த நாட்டிலே மிக பிழையான பொய்யான இனவாத மோதல்களை உருவாக்க கூடிய பொய்யான கருத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்ட வேண்டும். அதற்கான ஸ்தாபகங்கள் உருவாக்கப்படவேண்டும்.

 அம்பிட்டிய தேரரின் பேச்சிற்கு பின்பு இதுவரையும் அவருக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை என்றால் இந்த நாட்டிலே நீதி மன்றத்துக்கு மேலாக, சட்டம் அரசியலமைப்புக்கும் மேலாக   பௌத்த பிக்குகள் இருக்கிறார்களா என்பதை இந்த சட்ட சபையில்  இருப்பவர்களை இந்த நாட்டில இருப்பவர்கள் அல்லது இந்த நாட்டில் இருக்கிற நீதி நிர்வாகிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே யாராக இருந்தாலும்  குற்றம் புரிந்தால் அது குற்றம் தான்.  குற்றத்துக்கான தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவை இல்லாத செயல்களுக்கு நாங்கள் நேரத்தை செலவழிப்பதை விட  இவ்வாறானவர்களை நெறிப்படுத்த சரியான முகாந்திரம் உருவாக்கப்பட வேண்டும். வட கிழக்கில் தொல்லியல் அதிகாரிகள் சட்டதிற்கு மேலாக செயற்படுவது நிறுத்தப்பட வேண்டும். என்று மேலும் தெரிவித்தார்.

அம்பிட்டிய தேரர் போன்ற பௌத்த தேரர்கள் சட்டசபைக்கு மேலானவர்களா முஷாரப் எம்பி கேள்வி.samugammedia அம்பிட்டிய தேரர் இனவாத கருத்துக்களை முன்வைத்ததிலிருந்து இதுவரை அவருக்கு தண்டனை வளங்காமல்  இருப்பது சட்டசபை பௌத்த தேரர்களுக்கு அடிபணிவதனை குறிப்பதாக  கௌரவ சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான. எஸ். எம். எம். முஷாரப்  தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 4ஆம் நாள் விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பேசும் போது  வடகிழக்கு மாகாணங்களில் நடக்கின்ற சில இனவாத செயல்பாடுகள் தொடர்பில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார். அவரினுடைய இந்த கருத்தினை நான்  ஆமோதிக்கின்றேன். வடக்கு கிழக்கை பொறுத்த அளவிலே சில பௌத்த துறவிகளினுடைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருக்கின்றன.மட்டக்களப்பை சேர்ந்த ஒரு தேரர் அண்மையில் பேசுகிற  போது தமிழ்  மக்களை அவர்கள் எவராக இருந்தாலும் சரி தமிழ் மக்களை  கண்டம்  துண்டமாக வெட்டுவேன் என்று எச்சரிக்கையை அவர் வீடியோ காணொளி ஊடாக அவர் விடுத்திருந்தார். அவ்வாறு கண்டம் துண்டமாக  வெட்டுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ள பிக்கு இன்றுவரை கைது செய்யப்படவில்லை. அவருக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் எந்த நாட்டிலே ஒரு சட்ட ஆட்சி நடக்கிறதா என்ற ஒரு கேள்வி இருக்கிறது. உண்மையிலே ஒரு பொருளாதார கெடுபிடிக்குள் இந்நாடு சின்னாபின்னமாகிய நிலைக்குள் இருந்து இந்த நாடு ஓரளவுக்கு நாங்கள் மூச்சுவிடக்கூடிய இந்த சூழலிலே  மீண்டும் இனவாத ரீதியிலான செயற்பாடுகளை உருவாக்கும் வண்ணமான செயல்பாடுகள் தொடர்ந்தும் இந்த வட கிழக்கிலே நடந்து வருகிறது. எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த நாட்டிலே இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்த  ஜனாதிபதி அவர்களை நான் பாராட்டுகிற அதே வேளையிலே இந்த இனவாத ரீதியான போக்குடையவர்களை அடக்கி ஆள்வதற்கு இந்த சட்டம் பயன்படுத்த வேண்டும் என்பதை சட்டத்தை உருவாக்கிய இந்த உயரிய சபையிலே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். சாதாரணமாக அவர் பேசுகிற முறைமையை பார்த்தாலே அவர் எத்தகையவர் என்பதை புரிந்து கொள்ள முடியும். இன்று மட்டக்களப்பில் இனவாதத்தை பொறுத்த அளவிலே பல்வேறு கருத்துக்களை வெளி யிடுவதும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை  வெளியிடுவதும் அதனை யாரும் இன்று ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும், இதற்கு ஒப்பவே தான் நான் இருக்கின்ற அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் கூட ஒரு பௌத்த துறவி எங்களுடைய பிரதேசத்தை மையப்படுத்தி பல்வேறு விடயங்களின் ஊடாக அந்த மக்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தார். அதனை நாம் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இறைவனுக்கு முதலில் நன்றி. அரசாங்கமும் அதற்கு தேவையான சில நியாயங்களை புரிந்து கொள்வதற்கு உதவி செய்தது. அதே சமயத்தில் அவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கண்ட இடங்களெல்லாம் சென்று அது தங்களுக்கு உரியது, தொல்லியல் திணைக்களத்துக்கு உரியது,  அல்லது வனாந்தரத்துக்கு உரியது, இந்த வனாந்தரத்தை  மக்கள் அளிக்கின்றார் என்பதாக எல்லாம்  மிக பொய்யான கருத்துகளையும்  கட்டுக்கதைகளையும் கட்டுக்கதைகளையும் சொல்வதை  இன்று தேசிய ஊடகங்களில் இவ்வாறான செய்திகளை நாம் பரப்புகின்றதை நாம் பார்க்கின்றோம்.இன்று இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற அபத்தம் என்ன என்றால்  ஒரு செய்தியினுடைய உண்மைத்தன்மை பற்றி அறிவதற்கான ஒரு முகாந்திரம் இல்லை. ஒரு செய்தியை சொல்கிறபோது அது தொலைக்காட்சியாக இருக்கலாம், பத்திரிகையாக இருக்கலாம், அந்த பத்திரிகைகளும் செய்திகளுக்கும் அந்த செய்திகளை வெளியிடுகின்றன. செய்திகளை வெளியிட்டால் இவர்களுக்கான தண்டனை என்ன என்பது பற்றிய ஒரு முறைமைப்டுத்துதல் ஒன்று எங்கு தேவைப்படுகிறது. ஒரு முகாமைத்துவம் அல்லது ஒரு ஒழுங்கு படுத்தல் முறை ஒன்று தேவை.அண்மையில் ஊடகங்களை ஒழுங்குபடுத்தல் முறை பற்றி ஜனாதிபதி அவர்கள் புதிய சட்டமூலத்தை கொண்டு வருவது பற்றி பேசிய போது உடனடியாக ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் சிலர் கிளர்ந்தெழுந்துவிடுவர். இந்த ஊடகம் நிச்சயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் விரும்பியவாறு ஒரு செய்தியை பரப்பி அந்த செய்தியினூடாக நல்லவரை கெட்டவராகவோ அல்லது இல்லாத நிலையை எடுத்து சொல்கிற நிலைமை இந்த நாட்டிலே ஒரு அபத்தமான நிலைமை. எனவே அந்த நிலைமை மாற்றம் பெற வேண்டும். அண்மையில் எமது பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன் பில  பொத்துவிலுக்கு விஜயம் செய்த நிலையில்  பகுதிக்கு சென்று அங்கெ உள்ள பகுதிக்கு சென்று மிக தவறான பொய்யான கருத்துக்களை எல்லாம் அந்த குறிப்பிட்ட பௌத்த பிக்குவை வைத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட பகுதியை மக்கள் அளிக்கிறார்கள். அங்கே DIG க்கு 10 ஏக்கர் காணி இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணி இருக்கிறது. என்பதாக மிக பச்சைப் பொய்யான கருத்துக்களை முன்வைத்தார். அதன் பின்னர் இந்த பாராளுமன்றத்துக்கு வந்து அவரிடம் நேரடியாக சந்தித்து உட்கார வைத்து நான் அவரிடம் பேசினேன். நீங்கள் பேசிய இந்த விடயத்தில் நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள், படித்த ஒரு கற்று தேர்ந்த ஒருவராக இருக்கிறீர்கள் ஆனால் உண்மை நிலை எது என்று தெரியாமல் யாரோ ஒருவர் சொல்வதை கொண்டு நீங்கள் ஒரு கருத்திற்கும் பொது வெளியில் வெளியிட்டு நாடிட்குக்குள் ஒரு பிளவிற் உண்டுபண்ண முயற்சிக்கிறீர்கள். மூன்று இனமும் சந்தோசமாக ஒற்றுமையாக வாழ்கிற ஒற்றுமையாக வாழ்கிற ஊருக்குள் ஒரு பிரச்சினையை உருவாக்க பார்க்கிறீர்கள். இது மிக பாரதூரமான விடயம் என்பதாக நான் கூறுகின்ற போது அவர் கூறிய விடயத்தினுடைய தவறினை உணர்ந்து கொண்டார். மேலும் இந்த நாட்டிலே மிக பிழையான பொய்யான இனவாத மோதல்களை உருவாக்க கூடிய பொய்யான கருத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்ட வேண்டும். அதற்கான ஸ்தாபகங்கள் உருவாக்கப்படவேண்டும். அம்பிட்டிய தேரரின் பேச்சிற்கு பின்பு இதுவரையும் அவருக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை என்றால் இந்த நாட்டிலே நீதி மன்றத்துக்கு மேலாக, சட்டம் அரசியலமைப்புக்கும் மேலாக   பௌத்த பிக்குகள் இருக்கிறார்களா என்பதை இந்த சட்ட சபையில்  இருப்பவர்களை இந்த நாட்டில இருப்பவர்கள் அல்லது இந்த நாட்டில் இருக்கிற நீதி நிர்வாகிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே யாராக இருந்தாலும்  குற்றம் புரிந்தால் அது குற்றம் தான்.  குற்றத்துக்கான தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தேவை இல்லாத செயல்களுக்கு நாங்கள் நேரத்தை செலவழிப்பதை விட  இவ்வாறானவர்களை நெறிப்படுத்த சரியான முகாந்திரம் உருவாக்கப்பட வேண்டும். வட கிழக்கில் தொல்லியல் அதிகாரிகள் சட்டதிற்கு மேலாக செயற்படுவது நிறுத்தப்பட வேண்டும். என்று மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement