• May 19 2024

கோட்டாவின் நிர்வாகமே ரணில் ஜனாதிபதியாக பதவியேற்க காரணம்..!அமைச்சு பதவியை வாயால் கேட்கவில்லை – சாகர..!samugammedia

Sharmi / Jun 19th 2023, 4:10 pm
image

Advertisement

பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட, கோட்டாபய ராஜபக்ச உட்பட பல அமைச்சர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்காததன் காரணமாகவே, தாம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எமது கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிலர் இந்நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்க தவறிவிட்டனர்.

அந்த விடயங்கள் காரணமாக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க கட்சி என்ற வகையில் நாம் தீர்மானித்தோம். ஒரு கட்சியாக, நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று இப்போதும் நினைக்கிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் இந்த நாட்டில் சட்டத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டி, இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும், அவர்களின் கருத்துக்கு ஏற்ப அரசியலில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கவேண்டிய, அமைச்சுப் பதவிகள் தொடர்பில், கட்சியின் நிலைப்பாட்டை எழுத்து மூலம், ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, சில பொறுப்புக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான விவாதங்கள் மிகவும் சுமுகமாக நடைபெற்றன. இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்பு போலவே கட்சியும் ஜனாதிபதியும் ஒத்துழைத்து இணக்கமாக செயற்பட்டு வருகின்றனர்.

பல்வேறு இணையத்தளங்களும், வங்குரோத்து அரசியல்வாதிகளும் இது அமைச்சுப் பதவிகள் தொடர்பான பிரச்சனை என்று முன்னிலைப்படுத்த முயன்றனர். ஜனாதிபதியுடனான விவாதத்தின்போது அமைச்சுப் பதவிகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்தோம்.

இதேவேளை இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமே இதுவரை இராணுவப்புரட்சி இடம்பெறவில்லை.ஆனால் கடந்த காலத்தில் அவ்வாறான அனர்த்ததால், இலங்கை பலியாகிவிடுமோ என்ற சந்தேகம் இருந்தது. 76 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல்வாதிகள் உட்பட 600க்கும் மேற்பட்டோரின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அரசியல் கலாச்சாரம் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டில் இவ்வாறான தாக்குதல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், மீண்டும் அவ்வாறானதொரு கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.இது மிகவும் சோகமான நிலை எனவும் தெரிவித்தார்.

கோட்டாவின் நிர்வாகமே ரணில் ஜனாதிபதியாக பதவியேற்க காரணம்.அமைச்சு பதவியை வாயால் கேட்கவில்லை – சாகர.samugammedia பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட, கோட்டாபய ராஜபக்ச உட்பட பல அமைச்சர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்காததன் காரணமாகவே, தாம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.எமது கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிலர் இந்நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்க தவறிவிட்டனர். அந்த விடயங்கள் காரணமாக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க கட்சி என்ற வகையில் நாம் தீர்மானித்தோம். ஒரு கட்சியாக, நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று இப்போதும் நினைக்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் இந்த நாட்டில் சட்டத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டி, இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும், அவர்களின் கருத்துக்கு ஏற்ப அரசியலில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கவேண்டிய, அமைச்சுப் பதவிகள் தொடர்பில், கட்சியின் நிலைப்பாட்டை எழுத்து மூலம், ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, சில பொறுப்புக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான விவாதங்கள் மிகவும் சுமுகமாக நடைபெற்றன. இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்பு போலவே கட்சியும் ஜனாதிபதியும் ஒத்துழைத்து இணக்கமாக செயற்பட்டு வருகின்றனர். பல்வேறு இணையத்தளங்களும், வங்குரோத்து அரசியல்வாதிகளும் இது அமைச்சுப் பதவிகள் தொடர்பான பிரச்சனை என்று முன்னிலைப்படுத்த முயன்றனர். ஜனாதிபதியுடனான விவாதத்தின்போது அமைச்சுப் பதவிகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்தோம்.இதேவேளை இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமே இதுவரை இராணுவப்புரட்சி இடம்பெறவில்லை.ஆனால் கடந்த காலத்தில் அவ்வாறான அனர்த்ததால், இலங்கை பலியாகிவிடுமோ என்ற சந்தேகம் இருந்தது. 76 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல்வாதிகள் உட்பட 600க்கும் மேற்பட்டோரின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அரசியல் கலாச்சாரம் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது.கடந்த 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டில் இவ்வாறான தாக்குதல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், மீண்டும் அவ்வாறானதொரு கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.இது மிகவும் சோகமான நிலை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement