• May 01 2024

நிந்தவூரில் முதற் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவான மாணவிக்கு கௌரவம்...!samugammedia

Sharmi / Sep 7th 2023, 12:20 pm
image

Advertisement

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் குணசேகரம் ஜனுசிகாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று(06) இடம்பெற்றது

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரீ.கலையரசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

கௌரவ அதிதிகளாக நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் சரிபுத்தீன், நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ அப்துல் கபூர், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, ஆகியோர் கலந்து கொண்டனர்

நிந்தவூரின் வரலாற்றில் முதல் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற திறமையை தனதாக்கி கொண்டுள்ள ஜனுஷிகாவை பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ரீ. கலையரசன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


இதன் போது வைத்தியத்துறைக்கு தெரிவான மாணவி ஜனுஷிகா கருத்து தெரிவிக்கையில் ,

தான் சிறு வயது முதல் ஓர் சிறுபிள்ளை வைத்திய நிபுணராக வரவேண்டும் என்பது தனது இலட்சியம் என்றும், அதனை எதிர்காலம் நிச்சயம் கட்டியம் கூறி நிற்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் தான் ஒரு வைத்திய நிபுணராக வெளிவந்ததும் ஏழை எளிய மக்களுக்கு நிச்சயம் இலவசமாகவே தன்னுடைய சிகிச்சை அளிப்புக்கள் இடம்பெறும் எனவும் உறுதியளித்தார்

இந்த மாணவி கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அது விசேடசித்தி 09 A பெற்றமைக்காக அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் பரிசில் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



நிந்தவூரில் முதற் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவான மாணவிக்கு கௌரவம்.samugammedia நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் குணசேகரம் ஜனுசிகாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று(06) இடம்பெற்றதுநிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரீ.கலையரசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கௌரவ அதிதிகளாக நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் சரிபுத்தீன், நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ அப்துல் கபூர், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, ஆகியோர் கலந்து கொண்டனர்நிந்தவூரின் வரலாற்றில் முதல் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற திறமையை தனதாக்கி கொண்டுள்ள ஜனுஷிகாவை பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ரீ. கலையரசன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இதன் போது வைத்தியத்துறைக்கு தெரிவான மாணவி ஜனுஷிகா கருத்து தெரிவிக்கையில் , தான் சிறு வயது முதல் ஓர் சிறுபிள்ளை வைத்திய நிபுணராக வரவேண்டும் என்பது தனது இலட்சியம் என்றும், அதனை எதிர்காலம் நிச்சயம் கட்டியம் கூறி நிற்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் தான் ஒரு வைத்திய நிபுணராக வெளிவந்ததும் ஏழை எளிய மக்களுக்கு நிச்சயம் இலவசமாகவே தன்னுடைய சிகிச்சை அளிப்புக்கள் இடம்பெறும் எனவும் உறுதியளித்தார்இந்த மாணவி கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அது விசேடசித்தி 09 A பெற்றமைக்காக அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் பரிசில் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement