• May 04 2024

இலங்கையில் திறக்கப்பட்டுள்ள பெருமளவிலான மதுபானக் கடைகள் - சிறார்களும் மதுவுக்கு பலியாகும் அபாயம்..! samugammedia

Chithra / Sep 7th 2023, 12:26 pm
image

Advertisement


இலங்கையில் கடந்த காலங்களில் பெருமளவிலான மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்கிறோம் என்ற போர்வையில் தற்போதைய அரசாங்கம் மதுபான உரிம பத்திரங்களை தனது நண்பர்களுக்கு விற்பனை செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், சில பகுதிகளில் புதிதாக மதுபாணக் கடைகள் அமைக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர் என்றும், விகாரைகள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகாமையில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் சிறார்களும் மதுவுக்கு பலியாகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அதிகமாக ஆளாகுவது, நல்லொழுக்கமுள்ள சமுதாயத்திற்கு தடையாக உள்ளதாகவும், இவ்வாறான நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், இல்லாவிட்டால் பொதுமக்களுக்கு இடையூறுகள் கூட ஏற்படலாம் எனவும், தனது அரசியல் நண்பர்களுக்கு பியர் உரிமம் அல்லது மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதால் பல பகுதிகளில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (7) பாராளுமன்றத்தில் 27 (2) இன் கீழ் பியர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுற்றுலாத் தொழில் செயல்படாத பிரதேசங்களிலும் இந்த பியர் உரிம பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், எதிர்காலத் தேர்தலுக்காகப் பணம் தேடுவதற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரிமப்பத்திரம் என்பதை இது காட்டுவதாகவும், இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி தொகை கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாகவும், அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக இது குறித்த தகவல் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபானம் விற்பனை செய்யும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் 100 மதுபானக் கடைகளில் இருந்து சுமார் 100,000 மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், தற்போது ராஜகிரியில் உள்ள கலால் திணைக்கள கட்டடத்தில் போத்தல்களைப் பதுக்கி வைத்து, போலி ஸ்டிக்கர்களுக்கு பதிலாக உண்மையான ஸ்டிக்கர்களை ஒட்டி பிரச்சினைகளை மறைக்க பெரும் சதி நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வெளிப்படுத்தினார்.

இவ்வாறு, பாதுகாப்பு ஸ்டிக்கர்களை தவறாக அச்சிடுவது கூட்டு சதி என்றும்,இதற்கு குற்றவியல் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்க வேண்டும் என்றும், இது ஒரு ஆபத்தான பிரச்சினை என்றும் இதனை சாதாரணமாக தீர்த்து வைத்திட முடியாது என்றும், இந்த மோசடிகளை மூடிமறைப்பதற்கு நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட சில அரச அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இது நாட்டின் வருமான வரிவருவாயில் குறைவை ஏற்படுத்துவதாகவும்,மதுபானம் கடத்தலை பிரபலப்படுத்த வேண்டாம் எனவும் அதனைத் தடுத்து உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிகளை குறைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கோரிக்கை விடுத்தார்.


இலங்கையில் திறக்கப்பட்டுள்ள பெருமளவிலான மதுபானக் கடைகள் - சிறார்களும் மதுவுக்கு பலியாகும் அபாயம். samugammedia இலங்கையில் கடந்த காலங்களில் பெருமளவிலான மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்கிறோம் என்ற போர்வையில் தற்போதைய அரசாங்கம் மதுபான உரிம பத்திரங்களை தனது நண்பர்களுக்கு விற்பனை செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், சில பகுதிகளில் புதிதாக மதுபாணக் கடைகள் அமைக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர் என்றும், விகாரைகள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகாமையில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் சிறார்களும் மதுவுக்கு பலியாகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.மக்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அதிகமாக ஆளாகுவது, நல்லொழுக்கமுள்ள சமுதாயத்திற்கு தடையாக உள்ளதாகவும், இவ்வாறான நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், இல்லாவிட்டால் பொதுமக்களுக்கு இடையூறுகள் கூட ஏற்படலாம் எனவும், தனது அரசியல் நண்பர்களுக்கு பியர் உரிமம் அல்லது மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதால் பல பகுதிகளில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (7) பாராளுமன்றத்தில் 27 (2) இன் கீழ் பியர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.சுற்றுலாத் தொழில் செயல்படாத பிரதேசங்களிலும் இந்த பியர் உரிம பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், எதிர்காலத் தேர்தலுக்காகப் பணம் தேடுவதற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரிமப்பத்திரம் என்பதை இது காட்டுவதாகவும், இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி தொகை கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாகவும், அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக இது குறித்த தகவல் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.நாட்டில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபானம் விற்பனை செய்யும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் 100 மதுபானக் கடைகளில் இருந்து சுமார் 100,000 மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், தற்போது ராஜகிரியில் உள்ள கலால் திணைக்கள கட்டடத்தில் போத்தல்களைப் பதுக்கி வைத்து, போலி ஸ்டிக்கர்களுக்கு பதிலாக உண்மையான ஸ்டிக்கர்களை ஒட்டி பிரச்சினைகளை மறைக்க பெரும் சதி நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வெளிப்படுத்தினார்.இவ்வாறு, பாதுகாப்பு ஸ்டிக்கர்களை தவறாக அச்சிடுவது கூட்டு சதி என்றும்,இதற்கு குற்றவியல் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்க வேண்டும் என்றும், இது ஒரு ஆபத்தான பிரச்சினை என்றும் இதனை சாதாரணமாக தீர்த்து வைத்திட முடியாது என்றும், இந்த மோசடிகளை மூடிமறைப்பதற்கு நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட சில அரச அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.இது நாட்டின் வருமான வரிவருவாயில் குறைவை ஏற்படுத்துவதாகவும்,மதுபானம் கடத்தலை பிரபலப்படுத்த வேண்டாம் எனவும் அதனைத் தடுத்து உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிகளை குறைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement