• Nov 28 2024

குறிஞ்சாக்கேணி பால விவகாரம்; அப்துல்லாஹ் என்னுடன் விவாதம் நடாத்த தயாரா? தௌபீக் சவால்

Chithra / Oct 27th 2024, 11:11 am
image

 

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பால விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹரூப் தன்னோடு விவாதம் நடத்த வர வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சவால் விடுத்துள்ளார்.

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் தொடர்பாக, அப்துல்லாஹ் மஹரூப் அண்மையில் சமூக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை தொடர்பாக, நேற்று எம்.எஸ்.தௌபீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி ஆட்சி காலத்தில், நான்கு வருடங்களுக்கு மேலாக, குறிஞ்சாக்கேணி பாலத்தை கட்டவிடாது, நான் தடுத்துக் கொண்ருந்ததாக அவர் என் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு தேர்தலில், நான் வெற்றிபெறவில்லை. ஆறு மாத காலத்திற்குப் பிறகுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் எனக்கு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பை தந்தார். 

இந்த நிலையில், அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை தடுத்து நிறுத்தக்கூடிய அதிகாரம் எதனையும் நான் கொண்டிருக்கவில்லை.

அந்த நேரத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பிரதேச அபிவிருத்தி குழு தலைவராகவும் அப்துல்லா மஹரூபே இருந்துள்ளார். 

பிரதேச அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதுன் அதற்கு நிதி வழங்குவதும் மாவட்ட அபிவிருத்தி குழுதான். இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்தை நான்தான் தடை செய்தது என்று கூறுவது, அவருடைய கையாலாகாத தனத்தை எடுத்துக்காட்டுகிறது.

இது தேர்தல் காலம் என்பதால், எனது வெற்றியை தடுப்பதற்கு அவர் மேற்கொள்ளும் போலி பிரச்சாரமே இது என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் இதனை நான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. 

இதன் காரணமாக, இந்தப் பாலம் தொடர்பாக அவரோடு நேரடியாக விவாதம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். இதற்காக அவரே நேரத்தையும் காலத்தையும் தெரிவு செய்யலாம். ஆனால், விவாதம் நடைபெற வேண்டிய இடம் திருகோணமலை மாவட்டத்தில் ஏதாவது, ஒரு இடமாக இருக்க வேண்டும். 

மாறாக, எனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை குழப்புவதற்காக, அவர் என்னை கொழும்புக்கு அழைக்க முடியாது. 

எனவே இந்த மாவட்டத்தில், விவாதம் நடைபெற வேண்டிய இடத்தையும் அவரே தீர்மானிக்கலாம் என்றும் தெரிவித்தார்


குறிஞ்சாக்கேணி பால விவகாரம்; அப்துல்லாஹ் என்னுடன் விவாதம் நடாத்த தயாரா தௌபீக் சவால்  கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பால விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹரூப் தன்னோடு விவாதம் நடத்த வர வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சவால் விடுத்துள்ளார்.கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் தொடர்பாக, அப்துல்லாஹ் மஹரூப் அண்மையில் சமூக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை தொடர்பாக, நேற்று எம்.எஸ்.தௌபீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.2015 ஆம் ஆண்டு நல்லாட்சி ஆட்சி காலத்தில், நான்கு வருடங்களுக்கு மேலாக, குறிஞ்சாக்கேணி பாலத்தை கட்டவிடாது, நான் தடுத்துக் கொண்ருந்ததாக அவர் என் மீது குற்றம் சாட்டியிருந்தார்.ஆனால் 2015 ஆம் ஆண்டு தேர்தலில், நான் வெற்றிபெறவில்லை. ஆறு மாத காலத்திற்குப் பிறகுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் எனக்கு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பை தந்தார். இந்த நிலையில், அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை தடுத்து நிறுத்தக்கூடிய அதிகாரம் எதனையும் நான் கொண்டிருக்கவில்லை.அந்த நேரத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பிரதேச அபிவிருத்தி குழு தலைவராகவும் அப்துல்லா மஹரூபே இருந்துள்ளார். பிரதேச அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதுன் அதற்கு நிதி வழங்குவதும் மாவட்ட அபிவிருத்தி குழுதான். இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்தை நான்தான் தடை செய்தது என்று கூறுவது, அவருடைய கையாலாகாத தனத்தை எடுத்துக்காட்டுகிறது.இது தேர்தல் காலம் என்பதால், எனது வெற்றியை தடுப்பதற்கு அவர் மேற்கொள்ளும் போலி பிரச்சாரமே இது என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.இந்த நிலையில் இதனை நான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதன் காரணமாக, இந்தப் பாலம் தொடர்பாக அவரோடு நேரடியாக விவாதம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். இதற்காக அவரே நேரத்தையும் காலத்தையும் தெரிவு செய்யலாம். ஆனால், விவாதம் நடைபெற வேண்டிய இடம் திருகோணமலை மாவட்டத்தில் ஏதாவது, ஒரு இடமாக இருக்க வேண்டும். மாறாக, எனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை குழப்புவதற்காக, அவர் என்னை கொழும்புக்கு அழைக்க முடியாது. எனவே இந்த மாவட்டத்தில், விவாதம் நடைபெற வேண்டிய இடத்தையும் அவரே தீர்மானிக்கலாம் என்றும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement