திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணி உறுதிப்பத்திரங்களை,
வழங்குவதற்கான காணி கச்சேரி இன்று(19) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற காணி கச்சேரியில் புதுக்குடியிருப்பு,
கல்மெடியா வடக்கு, பாலம்போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு இதன் போது பயனடைந்தனர்.
குடியிருப்பு பகுதியில் தங்களுக்கான நிரந்தரமாக குறித்த காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை எதிர்காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த காணி கச்சேரியானது தம்பலகாமம் பிரதேச செயலக காணிக்கிளையினர் முன்னெடுத்தனர்.
இதில் குறித்த பகுதிகளின் கிராம சேவகர்கள்,காணி உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தம்பலகாமத்தில் காணி உறுதிப்பத்திரங்களை - வழங்குவதற்கான காணி கச்சேரி திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணி உறுதிப்பத்திரங்களை, வழங்குவதற்கான காணி கச்சேரி இன்று(19) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற காணி கச்சேரியில் புதுக்குடியிருப்பு, கல்மெடியா வடக்கு, பாலம்போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு இதன் போது பயனடைந்தனர். குடியிருப்பு பகுதியில் தங்களுக்கான நிரந்தரமாக குறித்த காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை எதிர்காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த காணி கச்சேரியானது தம்பலகாமம் பிரதேச செயலக காணிக்கிளையினர் முன்னெடுத்தனர். இதில் குறித்த பகுதிகளின் கிராம சேவகர்கள்,காணி உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.