• Dec 25 2024

திருமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆராய்வு..!

Sharmi / Dec 24th 2024, 7:14 pm
image

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுகூட்டம் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் அருண் கேமச்சந்திர தலைமையில் இன்று (24) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும், பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் விவசாய பிரச்சினைகள், மீன்பிடியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அனர்த்த முகாமை, நீர்ப்பாசனம் உள்ளிட்ட மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம் அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

குறிப்பாக வனவள பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவி திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது தம்பலகாமம், மொரவெவ, குச்சவெளி, மூதூர், வெருகல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறித்த திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன் வைக்கப்பட்டன.

அத்துடன் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடாமலும் கல்லு போடப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயம் மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும், கால்நடைகளுக்கான மேய்சல் தரைகள் இல்லாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டு இவற்றை விடுவிக்க வேண்டும் எனவும் கோரியபோது பதிலளித்த மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் திருகோணமலை மாவட்டத்தில் 24250 ஹெக்டேயர் காணிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இரண்டு வகையான காடுகள் காணப்படுவதாகவும் அதில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு மாத்திரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும் State Forest களுக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் காணிப் பிரச்சினைகளுக்காக துணைக் குழு ஒன்று அமைத்து தீர்வுகளை எட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் கேமச்சந்திர தெரிவித்தார்.

அத்துடன்  2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூதூர் பகுதியில் உள்ள 40.5 ஹெக்டேயர் கடற்பகுதியில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டு பின்னர் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட கூடுகட்டி மீன் வளர்க்கும் திட்டத்தை மக்களுடைய கருத்தினை பெற்று மீள் பரிசீலனை செய்யுமாறும்  இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைவிட துறைமுக அதிகாரசபை மற்றும் தொல்லியல் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இதில் லிங்கநகர், முத்துநகர் ஆகிய பகுதிகளில் துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டு அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகின்ற காணிகள் தொடர்பாகவும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புல்மோட்டை இலந்தைக்குளம் பகுதியில் சுனாமி வீட்டுத்திட்டத்திற்காக அரசாங்கத்தினால் மக்களுக்கு 10 பேர்ச் அளவில் வழங்கப்பட்ட காணிகளை மெசன்வெவ தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. மேலும் அனர்த்த முகாமைத்துவம், நீர்பாசனத் திட்டம், கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.

குறித்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,  பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.


திருமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆராய்வு. திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுகூட்டம் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் அருண் கேமச்சந்திர தலைமையில் இன்று (24) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும், பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் விவசாய பிரச்சினைகள், மீன்பிடியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அனர்த்த முகாமை, நீர்ப்பாசனம் உள்ளிட்ட மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம் அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.குறிப்பாக வனவள பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவி திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன. இதன்போது தம்பலகாமம், மொரவெவ, குச்சவெளி, மூதூர், வெருகல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறித்த திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன் வைக்கப்பட்டன. அத்துடன் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடாமலும் கல்லு போடப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயம் மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும், கால்நடைகளுக்கான மேய்சல் தரைகள் இல்லாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டு இவற்றை விடுவிக்க வேண்டும் எனவும் கோரியபோது பதிலளித்த மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் திருகோணமலை மாவட்டத்தில் 24250 ஹெக்டேயர் காணிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இரண்டு வகையான காடுகள் காணப்படுவதாகவும் அதில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு மாத்திரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும் State Forest களுக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.இந்நிலையில் காணிப் பிரச்சினைகளுக்காக துணைக் குழு ஒன்று அமைத்து தீர்வுகளை எட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் கேமச்சந்திர தெரிவித்தார். அத்துடன்  2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூதூர் பகுதியில் உள்ள 40.5 ஹெக்டேயர் கடற்பகுதியில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டு பின்னர் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட கூடுகட்டி மீன் வளர்க்கும் திட்டத்தை மக்களுடைய கருத்தினை பெற்று மீள் பரிசீலனை செய்யுமாறும்  இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதைவிட துறைமுக அதிகாரசபை மற்றும் தொல்லியல் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இதில் லிங்கநகர், முத்துநகர் ஆகிய பகுதிகளில் துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டு அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகின்ற காணிகள் தொடர்பாகவும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புல்மோட்டை இலந்தைக்குளம் பகுதியில் சுனாமி வீட்டுத்திட்டத்திற்காக அரசாங்கத்தினால் மக்களுக்கு 10 பேர்ச் அளவில் வழங்கப்பட்ட காணிகளை மெசன்வெவ தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. மேலும் அனர்த்த முகாமைத்துவம், நீர்பாசனத் திட்டம், கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.குறித்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,  பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement